ஞாயிறு, 25 நவம்பர், 2012

என்னை மறந்து போன கவிதை

 
கண்களில் கவிதையாய்
  எண்ணங்களில் வண்ணமாய்
பாதி தூக்கத்தில் புலம்பலாய்
   சின்ன குழந்தையின் புன்னகை போல்
எங்கும் நீயே
  ஒவ்வொரு நொடிகளிலும் உன்னையே நினைக்கிறன்
உன் நேசத்தை தொலைத்து விட்டு
   இன்று என்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
உன் அருகில் இருந்தும்
  தூரமாகிப் போனேன்
கற்பூரமாய் ,காற்றில் கலந்து
  உன் மூச்சுக் காற்றாய் மாறிட ஆசை
நான் எழுதிய கவிதை
  இன்று என்னை மறந்து போனது
அதன் நினைவுகள் மட்டும்
  என்னுள் ...

பசுமை

 
ஏன் என் இதயத்தை காயப்படுத்துகிறாய்
   உன் கோடரியால்
இப்படிக்கு மரம்
நல்ல குடிநீர் கிடைக்கலாம்
நல்ல நண்பன் கிடைக்கலாம்
நல்ல தோழி கிடைக்கலாம்
நல்ல காற்று கிடைக்குமா ?
என்னை மறந்து தினமும் ஓட்டை போடுகிறாய்
சின்ன குழந்தை பலுன் உடைப்பது போல்
உன் வாகன புகையால்
இப்படிக்கு
ஓசோன் வாயு படலம் ..

திங்கள், 5 நவம்பர், 2012

உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா


என் உயிர் வரை தீண்டி போகிறது
 உன் கள்ள விழி பார்வை
உன்னிடம் நான்  பேசிய நாட்களை விட
 என்னுள் நீ  பேசிய நாட்களே அதிகம்
நான் செல்லும் வழியெங்கும் அசைந்து ஆடும்
 மரங்கள்,அவற்றின் மெல்லிய காற்றும் கூட
காதலுடன்  என்னை வருடி செல்லுகிறது
  நீ அந்த காற்றாக  இருக்க
ஏங்குகிறது  இந்த ஏழை மனது