சனி, 8 டிசம்பர், 2012

புன்னகை

உன் மெல்லின புன்னகை
  ஒன்றே  போதும்,
இந்த உலகமே ,
 வீண் என்று தோன்றும்,
ஒரு நொடி பிரிந்தால்
  இலையுதிர் காலமாய் போகிறது,
என் காலை பொழுது ,
  உன்னை தழுவி செல்லும்
தென்றலை  போல்,
   என் நேசம்
என்றும் உன்னுடன்...

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நேசம்

நீ நேசித்தவர்கள்
   உன்னை விட்டு விலகி செல்லும் போதும்
உன்னை மட்டும் விலக்கி
   பார்க்கும் தண்டனை பார்வையால்
உன்னை பழிக்கு பழி வாங்கும்
   இந்த தேவதை பெண்கள்
இன்றும் இருகிறார்கள் உலகத்தில்
   ஒன்று மற்றும் அறியாமல்...
நேசத்தை பொய் என்று சொல்லும்
  கண்களுடன்..

ஞாயிறு, 25 நவம்பர், 2012

என்னை மறந்து போன கவிதை

 
கண்களில் கவிதையாய்
  எண்ணங்களில் வண்ணமாய்
பாதி தூக்கத்தில் புலம்பலாய்
   சின்ன குழந்தையின் புன்னகை போல்
எங்கும் நீயே
  ஒவ்வொரு நொடிகளிலும் உன்னையே நினைக்கிறன்
உன் நேசத்தை தொலைத்து விட்டு
   இன்று என்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
உன் அருகில் இருந்தும்
  தூரமாகிப் போனேன்
கற்பூரமாய் ,காற்றில் கலந்து
  உன் மூச்சுக் காற்றாய் மாறிட ஆசை
நான் எழுதிய கவிதை
  இன்று என்னை மறந்து போனது
அதன் நினைவுகள் மட்டும்
  என்னுள் ...

பசுமை

 
ஏன் என் இதயத்தை காயப்படுத்துகிறாய்
   உன் கோடரியால்
இப்படிக்கு மரம்
நல்ல குடிநீர் கிடைக்கலாம்
நல்ல நண்பன் கிடைக்கலாம்
நல்ல தோழி கிடைக்கலாம்
நல்ல காற்று கிடைக்குமா ?
என்னை மறந்து தினமும் ஓட்டை போடுகிறாய்
சின்ன குழந்தை பலுன் உடைப்பது போல்
உன் வாகன புகையால்
இப்படிக்கு
ஓசோன் வாயு படலம் ..

திங்கள், 5 நவம்பர், 2012

உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா


என் உயிர் வரை தீண்டி போகிறது
 உன் கள்ள விழி பார்வை
உன்னிடம் நான்  பேசிய நாட்களை விட
 என்னுள் நீ  பேசிய நாட்களே அதிகம்
நான் செல்லும் வழியெங்கும் அசைந்து ஆடும்
 மரங்கள்,அவற்றின் மெல்லிய காற்றும் கூட
காதலுடன்  என்னை வருடி செல்லுகிறது
  நீ அந்த காற்றாக  இருக்க
ஏங்குகிறது  இந்த ஏழை மனது
 




வெள்ளி, 19 அக்டோபர், 2012

எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய்

உன் ஞாபகமாய் நான் வரைந்த
    ஓவியங்கள் என்னுள்
இவை ஒவ்வொன்றும்
   பிகாசாவை மிஞ்சியவை
உன் ஒவ்வொரு அசைவுகளுக்கும்
  இன்று வரை எனக்கு அர்த்தம்
விளங்கவில்லை...
  ஏன் பெண்ணே ?
எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய்

இந்த பெண்ணின் நினைவுகளை..

உன் மனதின் ஆழத்தை கண்டுகொள்ள
   என் கூகிள் மனதும் திணறும்
செல்லமாய் பேசிய பேச்சுகளும்
   தண்டனையாய் நான் வாங்கிய
அன்பு கலந்த அடிகள்
  அதற்கு இலவசமாய் கிடைத்த
மெல்லிய மோனோலிசாவை மிஞ்சிய புன்னகை
  சாப்பிட்டு கொண்டே சாய்ந்து
மெலிதாய் என்னை பார்க்கும்போது
   தேவதைகளும் இவளின் அழகை கடன்
வாங்க வேண்டும்
   இந்த பெண்ணின் மனதை கவர
கொங்கு தமிழில் பேசி ,
   கேட்பரிஸ் டைரி மில்க் உடன்
என் இனிய தருணங்களை செலவிட்ட
  நாட்கள் மீண்டும் வருமா?
சந்தேகம் (காதல்) என்ற ஒரு வார்த்தையில்
  என் நட்பும் போனது
நானும் துரமாகிப் போனேன்
  யாருக்கு தான் ஆசை வராது ?
என் இனியவளை கவர்ந்து செல்ல
  காலம் என்னும் அலை அடித்து செல்லாமல்
பத்திரமாய் பாதுகாத்து வருகிறேன்
  இந்த பெண்ணின் நினைவுகளை..

 

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

உன் கண்களால் மன்னிப்பாயா

உன் இதயத்தில் இடம்பிடிக்க
   இலையை வைத்து கரை செல்ல துடிக்கும்
எறும்பை போல் போராடினேன்
   இலையை கூட எனக்கு தர விருப்பம் இல்லை
வாழ்ந்தால் உன்னோடும் இல்லை என்றால்
   நினைவுகளால் வாழ ஆசை
என் காதலை கருணை கொலைசெய்து விட நினைக்கிறன்
   முடியவில்லை!!!
தினமும் போராட்டம் எனக்குள்
   உன்னை கரம் பிடிக்க நினைத்த நாட்களோ
என் மன முடிச்சுகளை அவிழ்க்க நினைக்கிறது
  ஏனோ உன் அடிமையாகி போனது
என் மனது!
  உன்னை என் மனதில் எழுதி வைத்தாலும்
என்னால் ஏற்பட்ட மன காயத்திற்கு
   உன் கண்களால் மன்னிப்பாயா

 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஏழையின் மனது

உன்னை பெற்றவளை விட
  உன்னை வளர்த்த அப்பாவை விட
உன் சகோதரனின் பாசத்தை விட
   ஒவ்வொரு நாளும்
என் உள்ளத்தில் சுமக்கிறேன்
   உன்னை...சுகமாய்
என்னை ஏற்றுக் கொள்வாயா!
   உன் சுவாசம் போல்
உன்னை பின் தொடர்வேன்
 
   இப்படிக்கு
உன்னை கரம்பிடிக்க துடிக்கும்
   ஏழையின் மனது
 

துளிகள்

 
அறிவிக்கப்படாத மின் வெட்டைப்போல்
    இருண்டு போனது உன் நேசம்
 
அவள் நடந்து செல்லும் பாதையெங்கும்
   பின் தொடர்வேன் தெருவிளக்காய்
 
வெங்காயத்தை போல்,
   என் எண்ணங்களை உரித்துப் பார்க்கிறேன்
அங்கும் கண்களில் கண்ணீர்தான்
 
 
 கடற்கறை மணலை
   கவர்ந்து செல்லும்
கடல் அலையைப் போல்
   என் மனதை கவர்ந்து சென்று
இன்று ஏன் அமைதியாய் இருக்கிறாய்
 
உன் எதார்த்தமான சிரிப்பில்
  தோற்று போகிறேன்
தினமும்...
 
ரயில்வே தண்டவாளம் போல்
  அருகில் இருந்தும்
ஒன்று சேர முடியவில்லை
 
என்னை சாய்த்து விட்ட கவிதை நீ
  பெண்ணே
நீ ஏன் எனக்கு மட்டும் கவிதையாகிப் போனாய்

 

இன்றாவது நீ என்னை நினைப்பாயா!

காதல்
என் இதயத்தில் தோன்றி
   அவளின் எண்ணங்களில் முடிந்தது
எதிரியாய்!
   காலைப்பொழுது சூரியனாய்
இரவின் தென்றலாய்
   மழைப்பொழிவின் போது மண் வாசமாய்
என்றும் அவளின் நினைவுகள்
  கவிதையாய் கண்கள்
இவை பேசும் மொழிகள் ஆயிரம்
  இதன் அர்த்தங்களோ யாருக்கு புரியும்
இன்றும் புரிந்தது போல் நினைக்கிறேன்
   என் உயிர் வரை தீண்டிப் போகிறது
தேவதையின் பார்வை
  வாழ்வின் ஒரு பாதியாய்
வசந்தமாய் வீசினாள்
  என் இலையுதிர் கால வாழ்வில்
நானே பேசிக்கொள்கிறேன்
  நடுரோட்டில்
இன்றாவது நீ என்னை நினைப்பாயா!


 

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

Give me a chance

 
I know you are my life
   my heart follows you
why you ignore me
   life goes on
days goes on
   you are always mine
you are my song
  you are my life
don't be separate
  when i will meet you
when i willl propose you
  you are my life
I lost in you
l lost my mind
l lost my faith
i lost everything
i can tell you
i will make you happy
   all the time
will you give me chance


 

உன்னை பின்தொடரும் நிழலாய்

என்னுள் நான் தேடிப்பார்க்கிறேன்
    நீ என் தோழியா ? காதலியா?
பண்பிலும் பாசத்திலும்
   என் காதலியாகிப் போனாய்
நேசத்தில் என் தோழியாகிப் போனாய்
   இதை உன்னிடம் எப்படி சொல்லுவது
ஏனோ என்னால் பிரித்து பார்க்கமுடியவில்லை
  உன்னுடன் நடந்த நாட்கள் இன்றும் நினைவில்
நீயில்லா நாட்கள் என்றும் நினைவில்
   நாட்கள் கறைந்து போனாலும்
உன் நினைவுகள் என்றும் வைரம் போல்
   என்னுள் மறைந்து இருக்கிறது
சொல்லாமல் தெரிந்ததால்தான் இன்று
   என்னை வெறுக்கிறாய்...
உன்னை பின்தொடரும் நிழலாய்
   என் நினைவுகள் என்றும் 

திங்கள், 24 செப்டம்பர், 2012

தேவதையின் அருகில் சில நாட்கள் (என் நிலவு)

தொட்டு விடும் தூரத்தில் என் நிலவு

   ஏனோ என்னிடம் வெளிச்சம் வீச மறுக்கிறது

அன்னிச்சையாக என் கண்களோ அவளைத் தேடிக்கொண்டிருக்கும்

  அருகில் ரசிகனாக இருந்தது எவ்வளவு சுகம்

தேவதையின் அசைவுகளில் மனம் பறிபோனது

  தூரத்தில் இருந்தும் ,என் நினைவுகளோ மிக அருகில்

தேவதையின் ஒவ்வொரு நிழல் படத்திலும்

  நான் தூரத்தில் இருந்தேன்

என் இந்த இடைவெளி என்று புரியவில்லை

    எண்ணகளின் மூலம் வெளியிட்டேன்

 ஏமாற்றமே மிஞ்சியது ...

அவள் தூரிகையில் சாய்ந்து ஆடும்போது

  தேவதைகள் சாமரம் வீசின

இவளின் வீழி அம்புகளில் உறைந்து போனது

  மலைகளின் இளவரசி இந்த கொடைக்கானல்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

என் குட்டி தேவதை!!!

பனிபடர்ந்த அந்த சோலைவனத்தில்
  வெற்றி பெற்ற வீரனாய் பறந்தது எங்கள் வாகனம்
நின்றது ,சில்வர் அருவியின் அழகைக்காண
 புகை மூட்டம்,நிரம்பிய சாலையில்
நிழலுக்கு ஒதுங்கிய வாகனமாய் , காத்திருந்தேன்
  குளிர்ந்த காற்று மேனி எங்கும் தீண்டிட வழிபார்த்து இருந்தேன்
மேனி படர்ந்த கம்பளி சால்வையுடன் ,
  தேவதை நடந்து வந்த அழகைச் சொல்லிட
வார்த்தைகள் என் தமிழில் இல்லை
  சில்வர் அருவியும் உறைந்து போனது
ஏன் ? என்னைப்போல் மனதை பறிகொடுத்தது
  பேசும் போது வெளிப்படும் சிறு பனிப்புகை
காற்றில் கலந்து என் கன்னத்தை உரசிச் சென்றது
   இப்படி ஒரு காலைப்பொழுது
மீண்டும் வருமா ...
   அவள் என் குட்டி தேவதை

தேவதையின் அருகில் சில நாட்கள் (உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா)

என் முதல் ரயில் பயணம் தேவதையுடன்தான்
   தாமரை இலையில் நீர் போல்
தூரத்தில் இருந்த என் மனது , துள்ளியது
   தேள் கடித்தவன் துள்ளுவது போல்
எங்கு சென்றாலும் அவளின் நினைவுகள் ஆட்கொண்டன
   அவள் எண்ணங்களின் சிறையில் என்னை ஆயுள் கைதியாகிவிட்டேன்
நான் மட்டும் தனித்தீவில் இருப்பதாய் உணர்ந்தேன்
   நண்பர்களுடன் பேசும்போது அருகில் என் தேவதை
வாசனை தீண்டியவுடன் முக்தி பெற்றேன்
    என்னவொரு அழகான தருணம்
என்னவள் பாதுகாப்பாக உறங்குகிறாள
    என்று பார்வையிட்ட நொடிப்பொழுது
பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றது
   என் எண்ணங்களும் , என் நேசமும்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தேவதையின் அருகில் சில நாட்கள் (கொடைக்கானல்)

கோடைப் பூக்கள் அவளைப் பார்க்க ஏங்கியது
    பனித்துளியைப் போல் வெள்ளை உள்ளம் கொண்டவள்
இந்த பூவின் வாசம்,குறிஞ்சிப்பூவின் வாசத்தை வீழ்த்தியது
    இவள் செல்லும் பாதையெல்லாம் பனிமூட்டம்
மேகக்கூட்டங்களும் தலைவணங்கி சேவகம் செய்தது
    பூக்களும் இவளைப் பார்த்தவுடன் தலை சாய்ந்து கொள்கிறது
காற்றில் தவழ்ந்து வரும் இசையைப் போல்
   அவளின் பேச்சு என் இதயத்தை வருடியது
தேவதையின் கனவில் கறைந்து
   தினமும் வாழ ஆசைப்படுகிறேன்
நெற்றிப் பொட்டு ஒன்றே போதும்
   அவளின் அழகைச் சொல்லிவிட
கனவுகள் தருகிறாள்,ஏக்கங்கள் தருகிறாள்
   இந்த கொங்கு நாட்டு தேவதையிடம் இழந்தேன்
என்னை முழுவதும்
   இந்த பூவின் வாசத்தில் மயங்கியது கொடைக்கானல் மட்டும் அல்ல
நானும் தான் ...
   உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா!!! 

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

இலைச் சருகாய் ...

காலைப் பனித்துளிபோல்
   என் மனதில்  ஒட்டிக் கொண்டாள்
மறுக்காமல், மறக்காமல்  நான் தவிக்கிறேன்
   புரியாத புன்னகையில்  சாய்த்து விடுகிறாள்
என்னை கடந்து போகும் நிமிடங்களில் ...
   பெண்ணே உன்னை கரம் பற்ற
கஜினி  போல் ,உன் மனதில்  படையெடுத்து வருகிறேன்
   நீயோ ! முகம் பார்த்து பூச்செண்டு  வீச மறுக்கிறாய்
நாட்கள் ஓடினாலும் ,உன் நினைவுகள் ஓடவில்லை
   என் காதலோ  காய்ந்த இலைச் சருகாய்  போனது
உன் மனதை பார்த்து வந்த காதல்
  நீ வரும் வழி பார்த்து காத்து  இருக்கிறது  

உன் பார்வையில்

   பெண்ணின் மனமோ  ஒரு பூங்காற்று
    காற்றின் இசையில் அசையும் இலைபோல்
அதன் அசைவுகளில்  என்னை பறிகொடுத்தேன்
  அவள் மடியில் தலை சாய்த்து
தேவதையின் வருடலில் மகிழ  ஆசைப்பட்டேன்
   யாரும் பாத்திராமல் , பாசத்துடன்  பார்க்கும்
பார்வையின்  அர்த்தம் தான்  புரியவில்லை
    மனதின்  எல்லைகோடுகளை தீண்டி போகிறது
 இந்த குட்டி தேவதையின் பார்வை!!!
    இந்த பெண்ணின் பார்வை  அம்புகளில் விழ்ந்து போனேன்
  மீண்டும், ஏன் கொள்கிறாய்  உன் பார்வையில்...

திங்கள், 3 செப்டம்பர், 2012

வறுமையில்

காதல் நேற்று கண்ட கனவாய் உள்ளது
   என் இதயத்தில் ஆரம்பித்த காதல்
கானல் நீரைப் போல் ஆனது
   எல்லாம் இருந்தும் இவள் அன்பில்லாமல்
வறுமையில் வாடுகிறேன்!!!
   வறுமையில் இதுவும் ஒருவகை
காதலியின் அன்பில்லாமல் வாடுவது !!!
   என்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை அறியாமல்
தினமும் ஒரு வண்ணத்துடன் வரும் பட்டாம் பூச்சிபோல்
   சிறகடித்துக் கொண்டு இருக்கிறது அந்த நிலவு
என்றாவது என் வானில் வட்டமிடுமா?

காலைப்பொழுது

சூரியனின் ஒளிக்கீற்றுகள்
  என் வீட்டின் ஜன்னலில் வாசம் செய்ய
கண்களை தேய்த்து கொண்டே எழுந்தேன்
  என்னை வரவேற்ற சூரியனை பார்க்க
சோம்பலும் ,காலை கனவுகளும் முறிந்துபோக
     என் உடம்பை முறுக்கி எழுந்தேன்  
 என் வீட்டு மாடியில்,காலையில்
    பல் துலக்கி கொண்டே வானத்தை பார்ப்பது
  எவ்வளவு சுகம் ...
    இன்றாவது என்னை அழகாக மாற்றாதா !!!
 நான் வாங்கிய பேசியல் க்ரீம்
     என் மனதில் பேசியபடி , தலைவாரிக்கொண்டு
 ரயில்வே பாதையில் அதை முந்திக்கொண்டு
     நடந்தேன்,கண்களில் புதிய நம்பிக்கையுடன்
 பேருந்தில் உள்ள கூட்டத்தில்,
     பக்கத்து மனிதனின் வேர்வை நாற்றம், கால்மிதிபடுதல்
 பேருந்து ஓட்டுநரின் விளையாட்டுதனமான குலுங்கல்
     ஆகமொத்தம் விடுதலையான சிறைப்பறவையாய் ,
   இறங்கினேன் என் அலுவலக வாசலில்.
 
 

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அவள்

அவள் நடந்து செல்லும் பாதையெங்கும்
    பூக்களாக மாறியது
அவள் கன்னத்தில் பட்டு உரசி சென்ற
    காற்று மேகமாய் மாறி மழையை பொழிந்தது
 அவள் சூடி கொண்டதால் ரோஜாப்பூவும் அழகானது
    சாலையில் அவள் நடந்தால் எங்கும் டிராபிக் ஜாம்
 அவள் புன்னகை குளோஸ்- அப் புன்னகையை விழ்த்தியது
     நானும் காத்திருந்தேன் , என்னை கடந்து செல்லும்
  ஒரு நொடிக்காக பஸ்ஸ்டாப்பில் ....


 

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பனித்துளிகள்

உன் விழியின் வழியில்
   என் வாழ்கை
துணையாக வருவாயா !!!
   வாழ்கை முழுவதும் 
அவள் நடந்து போகும் திசையெங்கும்
   மேகக்கூட்டங்கள்
அவள் மேல் கொண்ட காதலால்
   மழையாய் பொழிந்தது வானம்....
 
 
அவள் வீட்டு நாய்குட்டி போல்
   அவள் கூடவே இருக்க ஆசைப்பட்டேன்
 
 
உன் அன்பின் மழையில் நனைய ஆசை
    மழையாய் வருவாயா
என் மேகத்தில் .....
 
 
ஏன் பெண்ணே என்னை தினமும்
   கொள்கிறாய் ..
உன் பார்வையால்!!!
 
 
உன் நெற்றி பொட்டில்
   குவித்து வைத்துள்ளாய்
உன் மொத்த அழகையும் ...

சனி, 11 ஆகஸ்ட், 2012

சென்னையில் ஒரு மழைக்காலம்

  மழைச்சாரலின்  போது  வரும்  மண் வாசனை  போல் 
    அவள்  என்னருகில்  இருந்தாள்
தீடிர் மழையால்  மகிழ்ந்து  போனது 
    சென்னை  மட்டும்  அல்ல , நானும்  தான்
அருகில்  இருந்தும் ,மழையில் நனைந்த 
   தீப்பெட்டி போல்  பற்ற முடியாமல் 
தவிக்கிறது  என் தீக்குச்சி  மனது 
     நண்பனிடம்  பிரியா  விடை பெற்று 
 நனைந்த மனதுடன் , நடைபாதையின்
    கருப்பு வெள்ளை  கோடுகளுக்கு  இடையே 
அவள் மனதின்  வெள்ளைக்  கோட்டை 
   என் கால் பாதங்களில் தீண்டிக்  கொண்டே  நடந்தேன் 
வழியெல்லாம்  பெருவெள்ளம் 
     கூட்டுக்கு  விரைவாக  பறந்து  செல்லும் பறவையாய்
  சாலையில்   மஞ்சள் ஒளியில் மின்னும் வாகனங்கள் 
     என் மேல் விழுந்த  சிறுதுளியை  ரசித்து கொண்டே நடந்தேன் 
  நான் நடந்த  பாதையில் அவளும்  நடந்தாள்
    கருப்பு கோடுகளை  தாண்டாமல் 
என் மனதின்  நிறமோ  கருப்பு 
     தினமும்  ஒரு மழைக்காலம்  
  அவள்  என்னுடன்  வந்தால் 
பேருந்தில் நான் பயணம்  செய்யும் போது 
    அவளின்  ஞாபகம் மழை நீரைப்போல் 
பேருந்தின் கண்ணாடியில்  வழிந்து செல்கிறது 
     என்னை  அறியாமல்  துடைத்துக்  கொண்டேன் 
என் விழியில்  வழிந்த  நீரை !!! 
    மீண்டும்  அவளின் அன்பின் மழையில்
 நனைய  ஆசை!!!
     வருமா  என் காதல்  மேகம் ...
அவளுடன்  வாழ்ந்தால்  தினமும் 
   மனசெல்லாம்  மழை தான்








வியாழன், 9 ஆகஸ்ட், 2012

விழுந்தேன்


நான் உன்னிடத்தில் விழுந்தேன்
உன் அழகில் அல்ல
உன் கன்னத்தின் ஆழமான குழிகளில் !!!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

உங்கள் நண்பன்


எல்லோர் வாழ்விலும்
    வரும்  ஒரு  இனிய  வசந்தம்
தென்றலும் , சுனாமியும்  வரும்  இந்த உலகத்தில்
      நம்மை அவன் பாசத்தால் கரை சேர்ப்பான்
அவன் இல்லா நாட்கள்
    கருமை சூழ்ந்த  இரவை  போல் இருக்கும்
என் எண்ணங்களை , என்னை விட
     முதலில்  அறிந்து செய்பவன்
எந்த பெண்ணை  சைட்  அடித்தாலும்
     எங்களுக்குள்  சண்டை வந்ததில்லை
வாழ்வின்  பாதியில்  வந்து  வலியை தந்து
    மறந்து செல்லும்  பெண் தோழிகள்  போல் அல்லாமல்
என்  வெற்றியிலும் , வலியிலும் ஆறுதல் சொல்வான்
    ஒரு  மச்சானாக , மச்சீயாக, அமிகோஸ் ஆக
 எல்லோர் வாழ்விலும்  வருவான் இந்த நண்பன்
     ஒவ்வொரு ப்ரண்ட்சும்  தேவை மச்சான் ...


இதை என் இனிய நண்பர்களுக்கும் ,தோழிகளுக்கும்  சமர்பிக்கிறேன்
      அன்புடன்
        உங்கள்  நண்பன்



சனி, 4 ஆகஸ்ட், 2012

மனகோட்டை

அவளை  எண்ணி  என் மனதில்
 கட்டிய   கோபுரம் , பாரிஸ் ஈபில்  விட பெரியது
என் மனதில், வாசம் செய்ய
    என் கோபுரத்தை ஒரூ முறையாவது  பார்பாயா?
என்று  காத்து கொண்டு இருக்கிறேன்
    ஏனோ அவள்  இன்று வரை  வரவில்லை
என் கோபுரமோ!
    பைசா நகர  சாய்ந்த  கோபுரமாகிப் போனது
மண்ணில் விழுந்து  சரியும் முன் வந்து விடுவாள்
     என்ற நம்பிக்கையுடன்
நாட்களை  கழித்து கொண்டு இருக்கிறேன்


      

என் குட்டிமா!!!

என்  காதல்  பயணத்தில்
  அவளின்  குட்டி  ஸ்மைல்,மெலிதான  கோபம்
இனிய  நினைவுகள்  என்னை ஆட்கொண்டிருக்கும்
    என்  குட்டிமாவின்  பெயரை  என் வீட்டின்  அருகில்
உள்ள  கள்ளி செடியில்  எழுதி வைத்தேன்
    இனிய இரவின்  நிலா ஒளியில்  மின்னியது
கடற்கரை  மணலில்  எழுதி  வைத்தேன்
    அவள் மேல் கொண்ட காதலில்  அள்ளி சென்றது அலை
என் விட்டு  மாடியில்
     இரவுப் பொழுதில்  உலாவரும் இரு நச்சத்திரங்கள்
வான் வெளியில் என் காதலை  எழுதினேன்
      ஒன்று நான் ,மற்றொன்று  என் குட்டிமா
எங்கள்  இருவரின்  நெருக்கமும்  வளர்பிறை போல்
     ஆனால் இன்று , தேய்பிறை  போல்  தேய்ந்து  போனது
முன்பை விட அந்த  இரு நச்சதிரங்களின்  இடையே
     உள்ள  நெருக்கம்  குறைந்து  போனது
அவளை  என் மனதில்  எழுதி  வைத்துள்ளேன்
      காலம் என்னும்  அலை  அடித்து  செல்லாமல்
பாதுகாத்து  வருகிறேன்




வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அவள்!!!

அவள் சிரிப்பில்
    என் இதயத்தை தொலைத்தேன்
அவளின் பார்வையில்
    என் கண்ணியத்தை இழந்தேன்
அவளின் பேச்சில்
     என் மௌனத்தை கலைத்தேன்
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
    அவளை தவிர ...

எப்படி என் மனசுக்குள் வந்தாய்

என் எண்ணங்களை ,
   அவள் மேல் கொண்ட காதலை
வெளிப்படுத்த இன்று வரை முடியவில்லை
    அவளிடம் சொல்ல ஆசையாக இருந்ததது
உன் விழி அசைவில் ,
    என் வாழ்கை முழுவதும்
உன் ரசிகனாக வாழ ஆசைப்படுகிறேன் என்று
    என்னை முழுவதும் மாற்றிக்கொண்டு
அவள் பின்னால் செல்ல விரும்பினேன்
    அவளோ இன்றுவரை இதயத்தை மாற்றிக்கொள்ள மறுக்கிறாள்
என் கனவில் தினமும் வரும்
    இந்த குட்டி தேவதையை சிறைபிடிக்க
துடிக்கிறேன் ... ஏனோ முடியவில்லை
    என் அருகில் இருந்தும் அந்த வெண்ணிலாவோ  
என்னிடம் மட்டும் ஒளிவீச மறுக்கிறது
   அந்த நிலவின் பார்வை என்றாவது
என்னை நோக்கி திரும்புமா ?...
    இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறேன்

சனி, 28 ஜூலை, 2012

இனிய நினைவுகள்

என்  உயிர்   பிரியும்  வலியை
    உன்  பிரிவில்  உணர்கிறேன்
என்  புன்னகை , உன்  உதட்டில்
    நினைவுகளை ,நிஜங்களை  மட்டும்
ஏன் மறக்க  நினைக்கிறாய்
     உன்  கண்களை  திறந்து  கொல்
 தொலைந்து  போன  என் இதயத்தை
       எடுத்துக்கொள்கிறேன்
உன்  வாசலில்  ஒரு  ரோசாவை  பார்த்து
       புன்னகைக்கும்  நீ  ஏன்?
இந்த  ரோஜாவின்  கடைக்கண்  பார்வைக்காக
      ஏங்கும் என்னை  ஏன்  தவிர்க்க  நினைக்கிறாய் ?
இன்று வரை  ஒரு  அகதியை  போல்
      அலைந்து   கொண்டுருக்கிறேன்
உன்  இதயத்தில்  இடம் கிடைக்காதா?

என் பயணம் அவளுடன் மட்டுமே

என் காதல்  தேய்பிறை  போல்
 தினமும்  தேய்ந்து  கொண்டிருக்கிறது
அவளுடைய  எண்ணங்கள்  என்னை
  ஆட் கொண்டு  விட்டது
சின்ன  கோபம் ,பாசம் , அக்கறை
 அவள்  வெளிப்படுத்தும் விதம்
ஒவ்வொன்றும்  கவிதை ...
அவள் கருவிழிகளில், கண்ணகுழிகளில்
தொலைந்து  போவது  எவ்வளவு சுகம்
அவள்  மனதை  பார்த்து வந்த காதல்
 இன்று  அவள் மனதில்  இடம் பிடிக்க  நினைக்கிறது
அவளுக்காக  என்னை  முழுவதுமாக  மாற்றிவிட்டேன்
  என் பயணம்  அவளுடன்    மட்டுமே    

வெள்ளி, 27 ஜூலை, 2012

காத்திருப்பது எவ்வளவு சுகம் !!!


என்  வெற்றிகள்  ஒவ்வொன்றும்
    எளிதாய்  கிடைக்கவில்லை
வாழ்க்கை என்னும்  கடலில்
  ஆசை  என்னும்  தூண்டிலில்
யாரும்  மாட்டிக் கொள்ளாமல்  இல்லை
  எல்லோருடைய வாழ்விலும்  வந்து போகும்
காதல் , என்னையும்  விட்டுவிடவில்லை
   என் வாழ்க்கையை  புரட்டி  போட்டுவிட்டது
உடன்  பிறப்புகளின்  பாசத்தால்
    எல்லோரும்  அகமகிழ்கிறார்கள்
ஆனால்  ஒரு  பெண்  மீது ஆண்  பாசம்  வைத்தால்
    எதிரியை  போல்  ஆகிவிடுகிறான்
அன்பிற்காக  ஏங்கும் உலகில்
    என் அன்பின்  விலை
யாருக்கும்  தெரியவில்லை
   அவளை போல்  என் மனதை  களவாடி
சென்றவள்  யாரும்  இல்லை
    என் எண்ணங்களில் , அவளின்
 நினைவுகள்  என்றும்  நிறைந்திருக்கிறது
      என்னவொரு  மூட நம்பிக்கை
அவள்  என் கைசேர மாட்டாள்
     என்று  உள் மனது  சொன்னாலும்
இன்றும்  அவளுக்காக  காத்திருக்கிறேன்
    காத்திருப்பது  எவ்வளவு சுகம் !!!

என் காலைப் பொழுது

நேற்றைய  இரவின்  இன்பங்கள்
  காலையில்  மறைந்து  போகிறது
புதுநாள்  , உற்சாகம்  மனதில்
  கையில்  ஒரு  கப்  ப்ரு  காப்பியுடன்
என்  விலையில்லா  தொலைகாட்சி  பெட்டி
 எனக்காக   காத்திருப்பது  போல்
கலைஞர்  டிவியின்  இசை அருவி
 எனக்கு பிடித்த  வீடியோ ஜாக்கி
அவளின்  எத்துப்பல்
 அவளுடன் காலையில் போன்  செய்து  வழியும்
அலையா விருந்தாளிகள்
  என் நண்பனுடன்  சின்னதாய்  ஒரு அரட்டை
மீண்டும்  அழகான  பாடல்கள் , அதில்
 என் எண்ணங்கள்  முழ்கிவிடும்
பின் சிறிய  குளியல் ,
 ஒரு வழியாக  என் காலைப் பொழுது
 தொடங்கியது ..

உனக்காக காத்திருக்கும் என் காதல்

உன் வீட்டு  முற்றத்தில்  வரும்  
 நிலவுக்கு உன் காதலை  வெளிபடுத்துகிறாய் 
உன்  வீட்டு  ரோஜா செடியுடன்
 காதலாகி , உறவாடுகிறாய்
உன்  மேல் கொண்ட காதலினால்
  உனக்காக  காத்திருகிறது ,உன்  நேத்தி  பொட்டு
  உயிர் இல்லாத  எல்லா ஜிவன்களிடமும்
 உன் காதலை  வெளிபடுத்கிறாய்
ஏன் என்னிடம்  மட்டும்  மறைக்கிறாய்
  உனக்காக காத்திருக்கும்  என் காதல் 

விண்ணை தாண்டி வருவாயா !!!

என் எண்ணங்களின்  வண்ணங்கள்  நீயாகிறாய்
    உன் நினைவுகள் என்னை தினமும் கொல்லுகிறது
உன் விழி அசைவில்  என் வாழ்கை
     மறந்து விடாதே ...
நீ  என்னை  வெறுத்தாலும்  உன்னையே நேசிக்கிறேன்
      என்னை கொஞ்சம்  ஏற்றுகொள்வாயா
என்னை உன்னுள் இழந்து விட துடிக்கிறேன்
      என் அழகான ராட்சசியே !
உன்  கண்கள் என்னும்  போதையில்  வீழ்ந்துவிட்டேன்
     என்னை உன் அன்பினால்  கரை  சேர்ப்பாயா
உன் வார்த்தைக்காக வாழ்நாள்  முழுவதும்  காத்திருக்கிறேன்
     என்ன செய்வது  என்று  புரியவில்லை ..
என் காதலை  எப்படி வெளிப்படுத்துவது ...
   கடவுளிடம்  முறையிட்டேன் , பதில் இல்லை
 என் கடவுளுக்கும்  மேலாக  உன்னை நினைக்கிறேன்
    உன் மனதில் சிறதளவு  இடம் கிடைக்குமா ?
என் பிரியமானவளே ..
    என் வாழ்வின் ஒவ்வொரு  நொடிபொழுதும்
 நம்பிக்கையுடன்  காத்திருக்கிறேன்

விண்ணை தாண்டி  வருவாயா !!!





  

வெள்ளி, 20 ஜூலை, 2012

You are my soul


Life is beautiful
  unless without you baby
she is my soul
  Make me sick everyday
Every minute , my thoughts around her only
  My heart beats,Pumping high
She stole my identity
   she is so awesome
Her blossoms, spreads like an air
   Her cute look, spoil my daily routine
My heart melted like an Ice
   Whenever she spoken with me
Wow... will decide my future baby
   you only my reasons
whenever her ignorance,Made me sick
   but my hearts follow you always
Baby. you are my soul
    you're my life
Always Waiting For you...
   You are so lucky
Because my hearts follows you
    I don't know why...
Nowadays my heart wounded..
   My living space knows my Cry
Still you are calm..,
  Atleast one cute smile enough
To boost my remaining life
       I know you baby...
because I am close to you..
  
         My hearts speaks...
 





சனி, 14 ஜூலை, 2012

பரிமாற்றங்கள்

 தொலைவில்  பார்த்தவுடனே
  மனதில்  ஒரு பரவசம்
என்  மனதோ  அருகில்  செல்
 என்று  என்னை  இயக்கியது
அவளை  நெருங்கி  செல்லும்  செல்லும்போது
  என் இதயம் சில  நிமிடங்கள் உறைந்தது
என்  வார்த்தைகளோ  தடுமாறியது
 ஏன்  இந்த தவிப்பு !
 என்னுடைய  செய்கைகள்   அவள்   அறிவாலோ
 தெரியவில்லை ?
பேருந்தில்  செல்லும் முன்  அவளின்
 ஒற்றைச்சிரிப்பு  இன்றும்
மறக்கவில்லை...




என் காதல்

அந்த  ஒற்றை  புன்னகை  சிரிப்பால்
 சுனாமியில்  பேரலை  சிக்கியது  போல்
என் மனம்  இடம்  மாறியது
 ஒரு   நாள்  உன்னை  பார்க்காமல்
என்  மனம்  என்னிடம்  இல்லை
 உன்னை  அழைக்க , என் மனதில்
ஒரு ஆயிரம்  போராட்டம்
 இதுதான்   காதலா
ஏனோ   புரியவில்லை  எனக்கு
 நிலவின்  ஒளியில்  சூரியனை
தேடும்  ஒரு குருடனை  போல்
 என்னை  உன்னுள்  தேடி  அலைகின்றேன்
உன்னுள்  உன் இதயத்திற்குள்
 தொலைந்து போவது
எவ்வளவு  பரவசம்
 விழிகளால் பேசி , மொழிகளால்
என்னை ,மெல்லிய   உணர்வுகளை  துண்டிய
  உன்  அழகுக்கு ,நான்  எப்போது
காவலன்  ஆகா  மாற்றுவாய் ...


என் சின்ட்ரெல்லா

 கிடைக்காத  அன்பும்
    மறுக்கப்படுகின்ற  காதலும்
 மரணத்தை  விட கொடுமையானது
   என்  சின்ட்ரெல்லா  என்னை
ஏற்க மறுத்தாலும்
  அவள்  கண்களால்
என்னை  எப்போதுதோ
 கைது  செய்து  விட்டாள் 


வியாழன், 12 ஜூலை, 2012

மனதின் வாய்ஸ்

சூரியன் மறையும் மாலை வேளை
    நடு வானில் பறவைகளின் அணிவகுப்பு
இயல்பாக அரங்கேறியது வான் வெளியில் ஒரு டிராபிக்
       வானுர்திகளும் கூட , ஒரு நிமிடம்
நின்று செல்கின்றன
       என் விட்டு தென்னை மரங்கள்
காற்றின் ஆசைக்கு ஏற்ப தலை ஆட்டுகிறது
      என் விட்டு துணி உலர்த்தும் கொடிகம்பம் கூட
அதன் ஸ்ருதிக்கு ஏற்ப ஆடுகிறது
       நானும் காற்றின் வாசனையை நுகர்கிறேன்
என் மனதை ஈர்ப்பது போல்
       பறவைகள் உலா வருகின்றன
நானும் அதனுடன் போட்டியிட்டு பறக்கிறேன்
       என் சிறு வயது நினைவுகளை அசை போடுகிறேன்
வெள்ளை நாரைக் கொக்குகள் வானில் வலம்வரும் போது ,
           உன் கைவிரல்களை நீட்டி கொண்டு ,
மனதிற்குள் வேண்டிக்கொண்டால்
         அவை வெள்ளை பூக்களை கை விரல்களில் தூவும்
என்னுள் உள்ள குழந்தை மனதும் ...
       நொடிப்பொழுதில் கை விரல்களை அதன் திசையை நோக்கி
நீட்டியது அன்னிச்சையாக என் மனதும் ,
         அந்த நாரைக் கொக்குகள் என்னை கடந்து வானில் மறைந்தது
சில நொடிகளில் , என் கை விரல்களை விரித்து பார்த்தால்
        ஒரு முழு நீள வாசகம்
" என் இந்த சோகம் உன்னுள் ..
உன் அன்பை பெற யாருக்கும் தகுதியில்லை
என்னை போல் , உன் மன சிறகை விரித்து பறந்து செல்
உன் அன்பை பிறருக்கு வெளிபடுத்து
அவர்கள் உன் அன்பை பெற விரும்பினால் "
என் மனதோ , விடுதலையான இந்தியாவை போல்
சந்தோசம் அடைந்தது ...
இது வரை இல்லாத ஒன்றை தேடி கொண்டு இருந்தேன்
இனிமேல் ... என் வாழ்கை பயணத்தை சுகமாக
தொடங்க போகிறேன் ...
என் சிறை பட்ட மனதின் வாய்ஸ்...


 







திங்கள், 9 ஜூலை, 2012

சென்னையில் ஒரு மாலைபொழுதில்

மனதில் ஒரு வெறுமை
  எனக்குள்  பெரிய  மாற்றம்
இந்த  சில  மாதங்களில் ,
 என் வீட்டை  மறந்தேன்
என்  டைலர்  லிஸ்ட் இல்  எல்லோரும்
  என்  அப்பாவை தவிர
என்னை அழைத்தாலும் , கண்டுகொள்ள  மறந்தேன்
   ஒரு மாலை   வேளையில்
என் வீட்டு  மாடியில்  உள்ள  சின்டக்ஸ்  - இல்
 என்னை  சாய்த்து  கொண்டு
என் கையை , என் கன்னத்திற்கு  ஊன்றுகோலக்கி
 அவளை நினைத்து  கொண்டு இருந்தேன்
முப்பொழுதும் , ஒரு சில நிமிடங்கள்
  என்னை வேகமாக  கடந்து  செல்லும்  அவளின்  நினைவுகள்
 இருந்தும் , சாலையில்  மதிய வேளையில்
   சுட்டெரிக்கும்  சூரிய  வெப்பத்தில்  தெரியும் கானல்   நீரை  போல்
என் கை சேர  மறுக்கிறாள் 
  நண்பர்களையும்  விட்டு வைக்கவில்லை
அவர்களையும்  மறந்தேன் 
   என்னை கடந்து  செல்லும் காகம்  குட
இந்த மாலைவேளையில்  சந்தோசமாக  இருக்கிறது
 என்னால்  மட்டும் முடியவில்லை
என் மனதை  அவளே  பூட்டி விட்டாள்
 அதன் திறவு கோலும்  அவளிடமே உள்ளது
அவளை எண்ணி கவிதையும்  மலர்ந்தது
  அவள் மேகங்களுக்கு   நடுவே  நின்று
என்னை  அழைப்பது போன்று தெரியும்
  உடனே  காற்றைவிட  வேகமாக  சென்று
அவளின் கரம்  பிடிக்க   நினைப்பேன்
  அவளோ , களைந்து செல்லும் மேகத்தை போல்
என்னிடமிருந்து விலகி செல்கிறாள்
  அவள்  மனதின்  பனிப்பாறைகளில்  உரசி
அவளின் உதவியை நாடுகிறேன்
   கரை சேர ..
என் காதல்  ஒரு  கரை சேரா  ஓடம் போல்
  அவளின்  நினைவுகளால்  மட்டுமே
கரை சேர முடியும் ..
     
       





வெள்ளி, 6 ஜூலை, 2012

புன்னகை துளிகள்

மழை  வரும் போது வரும்  மண் வாசத்தை போல்
 அவளை கடந்து போகும்போது
என்னுள்  அவள் வாசம்  செய்கிறாள்
 என் வாழ்கை என்னும் பாலைவனத்தில்
அவளால்  மழைத்துளி  வருமா ?
 மழைக்கு எங்கும் வானத்தை  போல்
அவள் புன்னகை என்னும் மழை துளிக்காக
 வாழ்கை முழுவதும்  காத்திருக்க போகிறேன் ...

என் வானவில்

காலையில்  தோன்றி  மாலையில்
 மறைந்தாலும்  எனக்கும்
வானவில்லுக்கும்  ஒரு நட்பு  உள்ளது
 காலையில் , அதன்  வண்ணக்  கதிர்  குவியல்களுடன்
என்னை எழுப்புகிறது
 என் மனமோ ,பறவையை  போல்
அதன் அருகில்  பறந்து சென்று ,
  சின்னதாக ஒரு  'Hai' சொல்லிவரும்    
மாலைவேளையில்  என் விட்டு  முற்றத்தில்
 என் தலை சாய்த்து   அதை வரவேற்க காத்திருப்பேன்
அதன் வண்ணங்களுடன்  மறைந்து இருந்தாலும்
 ஒரு முறை  எனக்காக  ..
பொன்னிற வண்ணத்துடன்  நிலவை
  துணையாக  அனுப்பும்
நாங்கள்  இருவரும் பேசி கொள்ளும்போது
  நான்  காதலயை  பற்றி என்ன நினைக்கிறாய் ?
என்றதும் .அதன்  ஒளிக்கதிர்கலளால்
  அதன் தேவதையின் , இருப்பிடத்தை  உணர்த்தியது
நிலவோ ..அவளைவிட  ஒளிவிசினாலும்
  அவளின்  கண்களின் காந்த அலைகளுக்கு  முன்
ஒழி வெற்றி போனது.
  இன்றுவரை  அவளை காதலித்தாலும்
நிலவால் வெளிபடுத்த முடியவில்லை
 என்னிடம் மட்டும் சில நேரங்களில் வெளிபடுத்தும்
சில நிமிடங்களில் , நிலா மறைந்தது
 வானம் மேக முட்டதுடன்   இருந்தது
நானும் சிறிது  நேரம் தொங்கிவிட்டேன்
 எதோ ஒன்று  கன்னத்தில்  பட்டு  தெரித்தது
மீண்டும் ,மீண்டும்  திண்டியது
 மழைத்துளியாக ..
அவள் மேல் கொண்ட  அன்பை  வெளிபடுத்தியது !
 இன்றும்  நிலவின்  காதல்  தொடர்கிறது
என்றாவது  வெளி படுத்துமா 
 அதன் காதலை ?

ஏக்கத்துடன்   நிலவின் நண்பன் ..


வியாழன், 5 ஜூலை, 2012

எங்கே என் அழகிய தமிழ் மகள்

அவள்  கோவிலுக்கு  செல்லும் அழகை
    எப்படி வர்ணிப்பது
பட்டு நிற தாவணியில் , காலில் 
   வெள்ளி கொலுசுடன்
அவள் என்னை  கடந்து செல்லும் பொது
    நான்  மட்டும் அல்ல , எல்லோரும்
ஒரு நிமிடம்  திரும்பி  பார்ப்பார்கள்
    எங்கள் விட்டு  தோட்டத்தின்  நடுவே
காலையில் அவள் நடந்து செல்லும் வரை
    புல்லில் மீது   உள்ள  பனித்துளிகள் காத்து கிடக்கின்றன
அவள்  கால் பாதங்களில்  , உரசும் அந்த  ஒரு நொடியில்
    பிறவி பலனை  அடைகின்றன
வழியில் செல்லும்போது , உதிர்த்து கிடக்கும்
   இலைகளை  எடுத்து  தன கன்னத்துடன்
ஒரு முறை காதலுடன்  உரசி கொள்வாள்
  உடனே அதற்கும்  காதல் தீ
பற்றிகொள்ளும் ..
  கோவிலில்  அவள்  தரிசனம் செய்துவிட்டு
வரும் வரை காத்திருப்பேன்
  அவளின் தரிசனம் காண

நெற்றியில் திருநிருடன் , ஈர குந்தலளுடன்

  இடது கையில் அபிசேக தட்டுடன் ,
வலது கை காற்றில் கலைந்த குந்தலை 
 வருடி கொண்டு  என்னை  கடந்து செல்வாள்
ஒரு நிமிடம் இதய  துடிப்பு ,
  நின்று விடும்..
மொத்தத்தில்  அவள்  ஒரு அழகிய தமிழ் மகள்
  ஆனால்  இன்றைய பெண்களோ
சூடிலும் , லோ  ஹிப்  Pant இல்
 எடுப்பாக  தெரிந்தாலும் ..
அவளை  போல்  யாரும் இல்லை
 அவளுக்கும்  இன்றைய பெண்களுக்கும்
    ஒரு ஒற்றுமை உள்ளது ..
இருவரும்  அழகான தமிழச்சிகள்
   ஒருவனக்காக  வாழும்  தேவதைகள்
ஒரு  தமிழச்சியின் மனதில் இடம் பிடிப்பது
  அவ்வளவு  எளிதல்ல ..
அவர்களை போல்  மனதை  கொள்ளை அடிப்பது
 யாரும் இல்லை ..

            என்  தமிழச்சியை  தேடி கொண்டு இருக்கிறேன் ...








 

What Should I do?

My heart beats followed her only,
 She made me slave
Her smile makes me uncomfortable
 Whenever my home I saw her in space
She is a sparkling Star
  I am following her in space.
Why she is amazing?
She will be cousin of monelisa
In my living space,
Her smile spreads over there…
I don’t have any idea to impress her.
But she impressed without asking my heart
Wow. I know her smile
Will be powerful weapon
To destroy my heart.
I am trying to find my place to her heart
It is always closed…
What should I do

ஞாயிறு, 1 ஜூலை, 2012

En NANBAN

இந்த எழுத்துகள் என் நண்பன் நினைவாக எழுதியது ...


நண்பன்   என்ற  வார்த்தைக்கு  அர்த்தம் தெரியாத  போதே
எனக்கு  நட்பை  புரிய வைத்தவன்
ஒரே  சைக்களில் ஒன்றாக சென்று ,
வழியில்  செல்லும்  அனைத்து பெண்களயும்
முந்தி  சென்று ,செல்லும்  பொது ,
அவர்களை ஓர  கண்ணால் பார்த்துக்கொண்டே , தேன் மிட்டாய்
தின்றது
எங்கள்   வகுப்பின்  பொங்கல் விழாவன்று
யாருக்கும்  தெரியாமல்  வெள்ளம் திருடி  தின்றது
என் வகுப்பு  எஞ்சல்கள் பார்க்க வேண்டும்  என்பதற்காக
சைக்களில் கைவிட்டு  ஒட்டி சென்றது
வேலியே  பயீறை மேய்வது  போல்
எங்கள் பள்ளி மாணவர்கள்  மதிய  உணவு  இடைவெளியின்  பொது
அருகில்  உள்ள  தோட்டத்தில்  திருடி  தின்றார்கள்
அவர்களை  கண்டிப்பது போல்  பாவனை செய்து
அந்த  தோட்டத்து  மாங்காய் திருடி  தின்றது
மதிய  உணவு  இடைவெளியில்  வேண்டும் என்றே
பள்ளி  தோட்டத்து  செடிகளுக்கு  வாட்டர்   தெளித்து
நேரத்தை  இன்பமாக  செலவிட்டது
இங்கிலீஷ்   எஸ்ஸே  வை  என்னுடைய  தோழிகளுக்கு  முன்
நன்றாக  கரும்பலகையில்  எழுதி  அவர்களின்
பாராட்டுகளை  வாங்கியது
என்னோடைய  வகுப்பில்  நாடக  போட்டியில்
நாரதர் வேஷம் போட்டு ,நாராயண  நாராயண என்று சொல்லி
என் தோழிகளின்  கிண்டலுக்கு பலி  ஆனது
எங்கள் பள்ளியின்  வினாடிவினா போட்டியில்
முதல்  பரிசை  உன்றாக  வாங்கியது
நான் பரிச்சையில்  பெயில் ஆனபோது
அவனுடைய  மதிப்பெண்ணை  எனக்கு  மாற்றி
சொல்லி என்னை  காத்தவன்
இன்று  அவனை  தேடி கொண்டு இருக்கிறேன்
என் ஊருக்கு செல்லும் பொது
கண்டிப்பாக  நான் படித்த பள்ளியை
என் பள்ளியின்  வகுபறையை
பார்க்கும் போது என் கடந்த காலங்கள்
நினைவுக்கு வரும்.மேலும்
பள்ளியின்  ஓவ்வெரு மரங்களின்  நடுவே
நடந்து  செல்லும்போது நாங்கள்  இருவரும்
ஒன்றாக சென்று   மரசெடிகளுகும் தண்ணிர்   தெளித்து சந்தோஷ பட்டது
என் கண்முன்னே  நிழலாக  வந்து செல்லும்
 
என்  நண்பன் என்னுடன்  நடந்து  வருவதை  போல்
தோன்றும் ,இன்றும்  தேடி கொண்டு இருக்கிறேன்
இன்று  படித்த எல்லோரும்  நல்ல  வேலைக்கு  செல்கிறார்கள்
தான்  படித்த  பள்ளியை  , இளமை  கால வாழ்கையை  யார் 
நினைத்து பாக்கிறார்கள்
எல்லோர் வாழ்க்கையிலும்  ஆட்டோக்ராப்  போல்
ஏதோ ஒரு நண்பர்கள் இருப்பார்கள் என் தோழிகள் குட இருப்பார்கள்
அவர்களை முடிந்தால்  நினைத்து பாருங்கள் ...