ஞாயிறு, 4 மே, 2014

ஏன்?...

நல்ல படிப்பு,திறமைகேற்ற ஒதியம் இல்லை,இருந்தாலும்
வீட்டின் வறுமை நிலையை நினைத்து,வேலையை தேடி ஓட வேண்டி உள்ளது.தனகென்று எதுவும் சேர்த்து கொள்ளாமல்,குடும்பத்திற்கு என்று
வாங்கிய சம்பளம் எல்லாம் கொடுத்து விட்டு,இருக்கும் பணத்தில் சிக்கனமாக
வாழ்க்கை நடத்தும் இளம் ஆண்கள் இங்கு ஏராளம்.அந்த ஆண்கள் சாதியில்
நானும் ஒருத்தன்.
  கல்யாணம் என்று வரும் போது ,அதுவும்  பெற்றோர் பார்த்து மனம் முடிக்க ஆசை படும் பெண்  வாழ்கையில் வரும் போது
நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?.வங்கியில் எவ்வளவு வைத்திருக்கிறாய் ?
மாத சம்பளம் எவ்வளவு ? இவை எல்லாம் இன்டர்வியூ கேள்விகள் .
இதில் பாஸ் பண்ணினாத்தான் .அடுத்த படி பேச்சு வார்த்தைகளை இரு
வீட்டாரும் தொடங்குகிறார்கள்.
வாழ்கையில் பணம் மட்டும் தான் தேவையா?
நல்ல பையன் ,தன்னுடைய பெண்ணை நன்றாக வைத்து இருப்பான!!!!
என்று நூற்றில் ஒரு பெற்றோர் தான் நினைகிறார்கள் ?
இதில் மாற்று கருத்து இருந்தால் என்னிடம் நீங்கள் பேசலாம்
எல்லா பெண்களும் கல்யணம் என்று வரும் போது
நல்ல சவிங்க்ஸ் வைத்து இருந்தால் போதும்
என்று நினைப்பது ஏன்?...


உன் நிழலாக வருவேன்

சில நேரங்களில் நமது சிந்தனைகள் கூட அழகாய் போகும்
    நம் எண்ணங்கள் அழகானவற்றை தேடும் பொது
உன்னோடு வாழ்ந்திட ஆசையடி
  என் தனிமை என்னை கொள்ளுகிறது
செல்லமாய் என் கன்னத்தை கிள்ளும் போதும்
 ஓரவிழி பார்வையில் என்னை களவாடும்
உன் கண்களும் .
   என்னை விட்டு செல்ல மறுக்கிறது
பூக்களில் தேனை தேடும்
  வண்டை  போல
உன் கண்களில் தேடினேன்
   நேசத்தை
வலிகள் தந்தாலும்
   சுகமாய் போகும்
உன்னோடு வாழும்போது

 படியில் பயனும் செய்யும்
 பயணியை போல
மனதில் ஓரத்தில் நின்று கொண்டு வருகிறேன்
 கைபிடித்து நீ அழைத்தால்
உன் நிழலாக வருவேன் ...
 உன்னோடு


மாதத்தில் முதல் வாரம்

மாலை பொழுதில்
 இருக்கும் வெப்பம் போதாது
 என்று,
என் அறையின் மின் விசிறி கூட
 வெப்ப கற்றை வீசுகிறது
மாதத்தில் முதல் வாரம்
 வறுமை இல்லாமல்
நானும் ஒரும் அம்பானி தான்
 என்று என்னும் மனது
ஒரு பக்கம்
 இன்றாவது நாம் நினைத்த ஒன்றை
வாங்கலாமா?..
 நினைத்த ஹேர் கட் பண்ணலாமா ?
ஜாலி அஹ ஒரு ட்ரிப்  போகலாமா ?
இல்ல பாரில் நண்பர்களுடன்
    இருக்கும் போது
மச்சான் ஒரு பீர் சொல்லு ?
என்று செல்லமா கேக்கலாமா ?
இரவில் நெடுஞ்சாலையில்
 யாரும் இல்லாமல் தனிமையில்
ஒரு வாக் போலாமா ?
 இந்த தடவை யாவது iphone  வாங்கலாமா ?
இப்படி நம் ஆசைகள் விண்ணை தொடும்
  யாரோ என் அறையை தட்டும்
சத்தம் கேக்கிறது
திறந்து பார்த்தல் தம்பி ?
இந்த மாத வாடகை பணம் இன்னும்
வரவில்லை எப்போ கிடைக்கும் ?...
இப்படித்தான் எல்லாருடைய வாழ்கையும்
போகிறது மாதத்தில் முதல் வாரம்




















செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கண்ணாடி

உடைந்த கண்ணாடி  துகள்களிலும் 
 உன் முகம் பார்க்கலாம் 
நீ  முயற்சி செய்தால் 
  உன்னை  நீ  விரும்பும்  வரை  மட்டுமே  
உன்  நிழலும்  கூடவே வரும் 
  உன்   எண்ணங்கள் அழகாக இருக்கின்றன 
ஏன்றாவது நினைந்தது உண்டா ?
அன்று வேலை  தர மறுத்த Facebook  
     இன்று இவரின் ( Brian) -whatsapp ஐய்  கோடிக்கணக்கில் 
விலைக்கு வாங்கியது 
    என்னால் உலகை மாற்ற மூடியும்  என்று 
அவர் தன்னையே நம்பியதால் தான் 
    கண்களில்  தன்னம்பிக்கை ஒளிர 
ஒவ்வொரு நொடியும்  நமது 
    நம்பிக்கையுடன் தொடங்கினால் 
நாமும் உலகை வெல்லலாம் 
   நம் மனம் கூட  
முகம் பார்க்கும் கண்ணடியை போல தான் 
  நாம் பார்க்கும் பார்வையில் தான்  உள்ளது 
நமது வாழ்கை..