ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஒருதலை காதல்

  நீ தொட்டுவிடும் தூரத்தில் 
 என் மனதில்  என்றும் அருகில் 
வந்து செல்லும் உன் நினைவுகள் 
  கடந்து செல்லும் காற்றும்  
ஒரு நிமிடம் என்னை கண்ணடித்து செல்கிறது  
  காற்றை  போல உன்னை நன் தழுவி செல்ல 
ஏனோ முடியவில்லை 
     சலனம் இல்லாத,என் மனதில் 
அலையை போல,தொட்டு செல்லும் 
   உன் புன்னகை 
ஆனால் அனுதாப அலை கூட  
    என் வானிலையில் அடிக்கவில்லை ஏனோ 
ஒருதலை காதல் என்றும் 
   கரை சேரா  ஓடம் ஆகிவிடும் 
மனதிற்கு தெரிந்தும்.
  கடல் கறை  மணலில் 
தேடிக்கொண்டு இருக்கிறேன் அவளுடன் 
  நான் கடந்து சென்ற படத்த சுவடுகளை 

காத்து இருப்பதும் காதலில் ஒரு வலி தான் 
  கிடைக்காத ஒன்றின் மேல்தான் நம் 
ப்ரியம் இருக்கும் .
   காத்திருக்கும் நொடிகளும் சுகமாக 
தோன்றினாலும்,நம்மை நாமே 
    வருத்தி கொண்டாலும் 
நம்மை தேடிவரும் தேவதைகள் 
    மிகவும் பஞ்சமே இந்த உலகத்தில் 

நாளைய பொழுதும், இதே நம்பிக்கையில் 
    செல்லாமல், 
நம்மை தேடிவரும் தேவதைக்கு 
  என்றும் அன்புடன் இருப்போம் 

   

ஞாயிறு, 14 ஜூலை, 2013

யோசிக்க தோன்றிய வார்த்தைகள்...

வாழ்கையில் பாதி நேரத்தை


Facebook, Twitter இல் தொலைத்து விட்டு

பிஸி ஆக இருக்கிறேன்

என்றும் சொல்லும் நம்முள் சிலர்

வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால்

... "இல்லமா நான் ரொம்ப பிஸி

சொல்லுவோம் !!! "

வாழ்வின் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்ள

Facebook மட்டும் போதாது. அதை

நம்மை நன்கு அறிந்த நம்

உறவுகளுடன் செலவிடலாமே ...



யோசிக்க தோன்றிய வார்த்தைகள்....



உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்

என்னுள் உன்னை ....

என் தோழியே


உன் நட்பை விட ஒன்றும் எனக்கு

பெரியதாக தோன்றவில்லை

உன் நட்பில் என்னை

புரிந்து கொண்டேன்

நாட்கள் ஓடினாலும்

பசுமையாய் ,அந்த அழகிய

நினைவுகள்

மறந்தும், மறைக்க நினைத்தும்


முடியாமல் தவிக்கிறேன்


கலைந்த முடியை ,தொட்டு


வருடிசெல்லும் காற்றும்


நடந்து செல்லும் போது

கவிதையாய் ஒட்டிக்கொண்டு


விடாமல் தொட்டு செல்லும்

அலையும் ,

உன்னை தேடிசெல்லும்

நட்பினால் என்னை தழுவிய


உன் சுவாசமும் இன்று பேச


மறுக்கிறது ...


தேடிக்கொண்டு இருக்கிறேன் ....


என்னுள் உன்னை ....





ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

சில நொடிகள்

சில நேரங்களில்




விக்கலும் வந்து செல்லுகிறது



ஒரு நிமிடம் நீ என்னை



நினைத்து இருப்பாயோ



என்ற என்ன தோன்றுகிறது





உன்னை கடந்து செல்லும் நொடிகளில்



காற்றை போல் வந்து தழுவி செல்லும்



உன் வாசனை,என்ன வென்று சொல்லுவது?...



நீ அறியாமல் ,நானும் தழுவி



செல்லுகிறேன்



என் நேசத்தால்





நட்பாய் பழக ,

செல்லமாய் கோவப்பட



மெலிதாய் ஒரு புன்னகை



உரிமையுடன் என்னை மிரட்டும்



இரு கரு விழிகள்



தேடுகிறேன் என்



பிரியமான தோழியை ....





மறக்க துடிக்கும்



நினைவுகள்



பேசிய அழகிய நாட்கள் ,



பார்வையால் உணர்ந்த நொடிகள்



இன்றும் நீ தேவைதையை போல்



வந்து செல்கிறாய்



என் கனவில் ..



தினமும் வேண்டுகிறேன்



மறக்காமல் இருக்க ...









நீ சொல்லும் ஒவ்வெரு வார்த்தையும்



கவிதையே



என்னைவிட உன்னை ,ரசித்தவன்



யாரும் இல்லை ,



ஏனோ உனக்கு மட்டும் புரியவில்லை



உலகத்தில் பிடித்த மொழிகளில்



இடம் பிடிக்காமல் போனது



உன் மௌனம் ..



இந்த மொழியை ,நேசிக்கிறேன்



என் தாய்மொழியை விட



அதிகமாக ....
























வெள்ளி, 19 ஏப்ரல், 2013

Solova ஒன்ன சுத்துனேன் Song...

Solova ஒன்ன சுத்துனேன்


Tasmark போய் கத்துனேன்

Worth Piece ஆ உன்ன நெனைச்சேன்

கண்ல Signal காட்டி

என்ன கவுத்த

திரும்ப உன்ன சுத்துனேன் ...

டாட்டா காட்டி மொறச்சு பார்த்த

build up பண்ணி , கழட்டி விட்ட

இருந்தும் நானும் உன்ன சுத்துனேன் ...

Google போல உன்ன சுத்துனேன்.....

வெள்ளி, 8 மார்ச், 2013

நீ கவிதையாய் பார்த்த சில நொடிகளில்

கடந்து செல்லும் சாலையில்


தோன்றும் கானல் நீரை போல்

கனவாய் போனது

உன் மனதில் இடம் பிடிக்க

போரடிய நாட்கள் ....





இல்லை என்று சொன்னாலும்

நொடிப் பொழுதில்

மீண்டும் வந்து போகிறது

இதய துடிப்பாக உன் நினைவுகள்



கடிகார முள்ளை போல்

பின் தொடர்கிறேன்

நொடி முள்ளாக நான்

நீயோ நெடு முள்ளாய் !!!

விட்டு விலகி செல்கிறாய்



நீ கவிதையாய் பார்த்த சில நொடிகளில்

உன் அருகில் இருந்தும்

தொலைந்து போனேன்








Ph:+919942748848

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

கண்களால் பேசினாய்

காலம் கடந்து சென்றாலும்


நாம் இருவரும் சென்ற சாலை

கைகோர்த்து சென்ற

மாலை பொழுது

சாலையை கடக்கும் போது

பயத்துடன்,

என்னை இறுக்கமாக பற்றிக்கொண்ட

உன் கரம் ,

அந்த நொடிபொழுதில்

என்னை கவிதையாய் பார்த்த

உன் விழிகள்

பேசிய மொழிகள்

இன்றும் எனது

ஒரே கவிதையாய்

உள்ளாய் ,,,

நளனும் , தமயந்தியும்


நளனும் , தமயந்தியும்
 

(Inspired by  the True story "The letter in the Wallet"  by Reader Digest 2012 Edition)


 ஒரு பெண்  அறுபது வருடங்களுக்கு முன்  எழுதிய ஒரு கடிதம்

அவளின்  காதலனை  தேடிய மனிதனின் சுவாரசிய பயணம்


  சென்னையில்  ஒரு மாலைப் பொழுதில் ,
    என்  அலுவலகத்திற்கு  அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில்  காத்திருந்தேன்
சில்லென்ற காற்று ,என்னையும் தழுவி செல்ல
  நான்  மட்டும் வழக்கம் போல் தனிமையில் விழி பாத்து  இருந்தேன்
என் பேருந்திற்காக ,

  தொட்டுவிடும் தூரத்தில் சில பெண்கள் ,செல்லமாய்  அலைபேசி  அழைப்புகள்
இவற்றின் நடுவே என்னை  கவனத்தை  ஈர்த்தது ,Flip kart விளம்பரம்
 நானும் அடிக்கடி   ஆன்லைன் ஷாப்பிங் செய்வேன்  என்பதால்
பார்த்து கொண்டு இருந்தேன் .என் கவனத்தை மீண்டும் திசை திருப்பியது  ஒரு Wallet ,
 என்ன ஒரு ஆச்சரியம் ? யாரும் எடுத்து செல்லவில்லை !!!

அதை என் கையில் எடுத்தேன் .அதன் உள்ளே இரு பத்து  ரூபாய் நோட்டுகளும் ,ஒரு செல்லரித்து போன கடிதமும்  இருந்தது .அதனை பார்த்தால் ,உரிமையாளர் வெகு நாட்களாக வைத்து இருப்பது
போல் இருந்தது .ஏதாவது  அட்ரஸ்  இருந்தால் ,உரியவரிடம்  சேர்த்து விடலாம் என்று இருந்தேன்

 அந்த கடிதம் 1924 இல்  எழுதபட்டு இருந்தது
 எனக்கோ பயம் கலந்த ஆர்வம் ,இது  எழுதப்பட்டு  60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
அதன் முதல் வரிகளே ,

 " என்  இனிய காதலன்  நளனுக்கு ,என்று  ஆரம்பித்து ,அவர்களின் அழகான உணர்வுகளை ,  நளன்  மேல் கொண்ட காதலை வெளிபடுத்தியது .
என் அம்மா ,   உங்களை பார்க்க விடாமல் ,பேசவிடாமல் என்னை தடுக்கிறார்கள்
  என்னை  தடுத்தாலும் உன்னை மட்டும் காதலிப்பேன்

இப்படிக்கு

 உன் கை சேர துடிக்கும்

 ர.தமயந்தி  "
 
 
 
மனதில் ஒரு சஞ்சலம்,இப்படியும் நடக்குமா  என்று ?,இந்த  அறுபது ஆண்டு கால வாழ்கையில்
 தன்னுடைய காதலியை தேடி அலையும்  நளனை  நினைத்தல் ,பொறாமையாக இருந்தது .
எப்படியும் அவர்களை கண்டு பிடித்து விட வேண்டும் ,என்று மனதில் எண்ணிக்கொண்டே
 என் இல்லம் வந்தேன்

இந்த இரவு தூக்கமின்றி  கலைந்து  போனது ,மறுநாள்  காலை , என் அலுவலகத்தில்  விடுப்பு எடுத்து கொண்டு ,அந்த முகவரி தேடி அலைந்தேன்.நான் வேலைபார்த்த பழைய கம்பெனி  அருகில்  இருந்தது  நான்  தேடிக்கொண்டு இருக்கும் அந்த முகவரி.ஒரு ஆட்டோ பிடித்து  அந்த வீட்டுக்கு  வந்தேன்

நான்  இன்றும் பார்க்க துடிக்கும் செட்டிநாடு வீடு , பராமரிப்பின்றி கலை இழந்து  போய்  இருந்தது

அருகே  சிறிய   தோட்டம் ,அருகே இருந்த செம்பருத்தி  செடி ,என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது ,ஒரு பழைய உஞ்சல் கட்டி விடப்பட்டி இருந்தது ..எங்கும் நிசப்தமாக அமைதியுடன் இருந்தது .

 நான்   சென்று அழைப்பு  மணியை அழுத்தினேன் ,இரண்டு முறைக்கு மேல் ...
  எந்த பதிலும் இல்லை ..விட்டு வாசலில் ஏமாற்றத்துடன் நின்று கொண்டு இருந்தேன்
தீடிரென்று  வீட்டின்  பின் புறத்தில் இருந்து ஒரு முதியவர் ,ஊன்று கோலுடன்  என்னை நோக்கி வந்தார்

  
  அப்பாடா ? என்ற பெருமூச்சுடன்  அவரை நெருங்கினேன்.
அவரிடம்   இங்கு தமயந்தி  இருக்கிறர்களா ?.நீங்கள்  தமயந்தின்  உறவினரா! என்று வினவினேன் .
 என்னை ஒரு நிமிடம்  பார்த்து விட்டு , தலையை சொரிந்து கொண்டே ,
 சில நிமிடங்கள்  அமைதியாக இருந்தார் .சில மணித்துளிகளில்
தெரியும் என்றார் !!!

  அவர்களின்  அம்மாவிடம்  இருந்துதான் இந்த வீட்டை என் மகன் வாங்கினான் .அவர்கள் விற்று விட்டு
திருவான்மியூர் அருகே உள்ள முதியோர் விடுதியில்  இருகிறார்கள் என்றார்.

   உடனே  நான்  முதியவரே  அந்த  இல்லத்தின்  பெயர் உங்களுக்கு நாபகம்  இருக்கிறதா!.கொஞ்சம்  யோசித்து  சொல்லுங்கள்.அவர்களின் குடும்ப  நண்பன்  வெகு தொலைவில்  இருந்து வருகிறேன் என்றேன்.

முதியவர் ,விட்டிற்குள்  சென்று விட்டார் .மீண்டும் திரும்பி வந்து ,தம்பி !
 அவர்கள் மீரா அனாதை  இல்லம் என்று சொன்னார் .
மனதில் சந்தோசம்  பொங்க , Just Dial அழைத்து  அதன் முகவரியை கூறித்துக்  கொண்டு ,
அவரிடம்  விடைப்  பெற்று கொண்டேன்.
                                                                                                          
                                                                                                                 
                           2.


நம்ம சென்னையின்  சுட்டெரிக்கும் வெயிலும் , சுகமாய்  இருந்தது ,
 மனதில்  ஒரு படபடப்பு ,காதலியுடன்  முதல் சந்திப்புக்கு  தயார் செய்வது போல் ,அங்கு போய்  எப்படி பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வந்தேன் பேருந்தில்,
நண்பகல்  மதியம்  3 மணி அளவில் ,திருவான்மியூர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன் .

 அதன் அருகில்  உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் , ஆட்டோ பிடித்து மீரா இல்லம் தேடி வந்தேன்.
வாட்ச்மேன் நேசபுன்னகையுடன்  என்னை வரவேற்றார் ,என்னிடம் விவரங்களை  பதிந்து கொண்டு
விருந்தினர் அறையில் ,இருக்குமாறு கேட்டு கொண்டார் . அவரின்  வருகைக்காக காத்துகொண்டு  இருந்தேன்
வேண்ட வெறுப்பாக சிறிது நேரம் ,நாளிதழ்களை பார்த்து கொண்டு இருந்தேன் .

நீங்கள் தமயந்தியை  தேடி வந்து உள்ளிர்களா ? என்றார் .அந்த இல்ல மெய் காப்பாளர்
 ஆம் !.என்றேன்


ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்றார் .சற்று அமைதியுடன் !
தமயந்தியின்  அம்மா சில நாட்களுக்கு முன்  இறந்து விட்டார்கள் .தமயந்தி மட்டும் இருகிறார்கள்  என்றார்.
சற்றும் தாமதம் செய்யாமல் , நான்  அவர்களை பார்க்கலாமா? என்றேன்
ஒரு கடிதத்தை அவர்களிடம்  சேர்க்க வேண்டும்  என்றேன் .

அவர்கள் தற்போது ஓய்வு அறையில்  உள்ளார்கள்!..

தமயந்தி விரும்பினால்  நீங்கள்  பேசலாம் என்றார்.


  மெய்க்காப்பாளர்  சென்ற சிறிது நேரத்தில் ,வாட்ச்மேன்  வந்தார்,
"அவர்கள்  3 வது  மாடியில்  டிவி  பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . என்றார்."

நானும் , வாட்ச்மேனும்  லிப்டில்  3 வது மாடிக்கு   சென்றோம் .
அந்த அறையில் அவர் மட்டும் இருந்தார்
"மெல்லிய பச்சை நீற நைட்டியில் , சிறு சுருக்கங்களில்  கண்கள் சற்று மங்கி போய் ,
கண்களில் உள்ள மூக்கு கண்ணாடியை தேய்த்து கொண்டே ,கார்டூன் பார்த்து ,குழந்தை
தனமாக  ரசித்து கொண்டு இருந்தார்.
என் நண்பன்  அடிக்கடி  சொல்வான்,தமயந்தி என்றல் அன்ன பறவை போல் அழகாக
இருப்பவள்  என்று சொல்லுவான்.தமயந்தி போன்ற பெண் கிடைத்தால் நீயும்  அதிர்ஷ்டம் செய்தவன்
என்று சொல்லுவான்.
"

அதைப்போல்  தேவதையாகத்தான் தெரிந்தார்கள்.நான்  சென்று என்னை அறிமுக படுத்தி கொண்டேன்
அவர்களோ   டோம்& ஜெர்ரி  பார்த்து கொண்டு இருந்தார்கள் .என் அறிமுகம் அவர்களை ஒன்றும்
செய்யவில்லை...
 நளனை  தெரியுமா ...உங்கள் வீட்டுக்கு அருகே வாசித்த நளனை  தெரியுமா ? என்றேன்
உண்டனே ,என்னை சற்று ஒற்று நோக்கினர் , தன்  மூக்கு கண்ணாடியை  விலக்கி  கொண்டு
கண் இமைகளில் ஆச்சரியம்  பொங்க  என்னை பார்த்தார் .

நொடியும் தாமதம்  செய்யாமல் , அந்த கடிதத்தை  அவரிடம் கொடுத்தேன் .
சில வரிகள் படித்தவர் ,சற்று ஆழ்ந்த சிந்தனையில்  இருந்து விட்டு
 தன்  கடந்த கால  காதல் நினைவுகளை  மனதில் ,
அசை போட்டு கொண்டே ,என்னிடம்  தன்  கண்களில்
பழைய காதல் மின்ன பேசினார் .

" இவர்  என் காதலர் நளன் ,என்னை விட  வயதில்  இரண்டு மடங்கு அதிகம் .
பார்பதற்கு அழகாக ஜெமினி கணேசன் போல் இருப்பார் . எங்களின்   இரு குடும்பங்களும்  அடிக்கடி 
சந்தித்து கொள்வோம் .அவரின்  வசீகர பேச்சும் ,நடந்து வரும் அழகும் ,என்னை பைத்தியம்     பிடிக்க வைத்து விட்டது .என் அம்மாவிற்கும் தெரியும் , ஆனால்  என்னை தடுத்து விட்டார்கள் "


நளனை  பார்த்தல் சொல்லுங்கள் , அவர்மேல்  இன்றும் பைத்தியமாக  இருக்கிறேன்
என்றார் காதலுடன் ! தமயந்தி .

என்னை அறியாமல்  நீர்  வழிந்தது  என் கண்களில் , அதை துடைத்துக் கொண்டு ,விடை பெற்றேன் .
என் மனதில்  ஒரு வைராக்கியம் , எப்படியாவது  அவர்களை ஒன்று சேர்த்து விட வேண்டும் என்று
தோன்றியது .

லிப்டில்  இறங்கும் போது , வாட்ச்மேன் அந்த Wallet பார்த்தவுடன் ,

இது நளன்  கண்ணன் உடையது என்றார் .

கண்களில்  ஆர்வத்துடன்  அவரிடம் கேட்டேன் .இது அவருடையது தான்
என்றார் உறுதியாக , மேலும்  அவர் இந்த இல்லத்தில்  பல நாட்கள்
வேலை பார்த்து வருகிறார் .
இருவரும்  நளன்  இருக்கும் 9 வது மாடியில் , பார்க்க  சென்றோம் .

நளனோ ,அவர் அறை  ஜன்னலின் வழியே , உற்று பார்த்து கொண்டு இருந்தார் .
 வாட்ச்மேன்  அவரிடம் சென்று , Wallet ஐ தொலைத்து விட்டீர்களா ! என்றார் ?
சில நிமிடங்கள் சென்றவுடன் , Wallet என்ற சொல் என்றதும்
தன்னுடைய ரெயின் கோட் பாக்கெட்டில் பதற்றத்துடன் தடவி பார்த்தார் .
அங்கு இல்லை ,நேற்று என் உறவினரை  பார்க்க செல்லும் போது
தவற விட்டு இருக்கலாம் என்றார் .


  நான்  இதுவா  அது  என்று தயக்கத்துடன்  அவரின் அருகில் சென்றேன் !.என்னை
உற்று பார்த்து விட்டு  அதனை  வாங்கி  கொண்டார் .உடனே  முதலில்  அந்த லெட்டரை  தேடினார்

 என் காதலின் நினைவாக  நான்  வைத்து இருப்பது  என்று சொன்னார் .
இந்த லெட்டரை படிக்கும் பொது , அவள் என் அருகில்  இருப்பது  போன்று தோன்றும் 
என்று பேசினார் .

உங்கள் தமயந்தியை சந்திக்க ஆசை  உள்ளதா  என்றேன்

அமைதி     நிலவியது ...அந்த அறையில்  எங்கள் மூவரையும் தவிர
யாரும் இல்லை ..

என்னை ஆர்வத்துடன் பார்த்தார் .பேசவில்லை
அவர் கண்களே காட்டி  கொடுத்து விட்டது
  
                    3.


மூவரும்  மீண்டும்   மூன்றாவது மாடிக்கு  வந்தோம்.
வாட்ச்மேன்  தமயந்தியிடம்  சென்று ,
"உங்கள் நளன்   வந்து இருக்கிறார்  என்று சொன்னார் "
அவர்களோ  , அமைதியாக இருந்தார்கள்
நான்  அருகில் சென்று  உன்களின் நளன்  கண்ணன்
தேடி வந்து இருக்கிறார்  என்றேன்
"

  உடனே  சற்று தொலைவில் இருந்த நளன்  ,தமந்தியை நோக்கி நடந்து வந்தார் .
நங்கள் வெளியே நின்று விட்டோம் .
இருவரும்  தங்களின்  கரங்களை பற்றிகொண்டனர் .
 நளனின்  கையை  தன்  கன்னத்தில்  வைத்து கொண்டாள்
அங்கே, உரையாடல்கள் நிகழ்ந்தன  மௌனமாக ...
இருவரும்  தங்களின்  விழிகளில் வழிந்த நீரை  துடைக்காமலே 
பார்த்து கொண்டு இருந்தனர் .


நான்  வாட்ச்மேனிடம்  சொன்னேன்

"கடவுள் நல்லவர் ,யாரையும்  பிரிப்பது  இல்லை என்றேன் .

அவர் நல்லவர் என்றால்  இப்படித்தான்  நடக்கும்  என்றார் ."


அவர்களிடம்  விடை பெற்றுக்கொண்டு ,என் இல்லத்திற்கு வந்தேன்

நாட்கள் ஓடியது , ஒரு நாள்  மீரா  இல்லத்தில்  இருந்து  போன் கால்  வந்தது .

நளனும் , தமயந்தியும்  திருமணம்  செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
நீங்கள் அவசியம்  கலந்து கொள்ளவேண்டும்  என்று சொன்னார்கள் .
அவர்கள் அழைப்பை கட் செய்தவுடன்
என் மனுதும்  செல்லவேண்டும்  என்று துடித்தது .
78 வயது  நளனும் ,76 வயது  தமயந்தியும் இல்லற வாழ்கையில்
இணையப் போகிறார்கள்  60 ஆண்டுகளுக்கு  பிறகு ,

அவர்களை வாழ்த்த,எனக்கு வயதில்லை என்றாலும்
ஒரு சிறு பூங்கொத்துடன்  போட்டோ எடுத்துக் கொண்டேன் .
சென்னையில்  எனக்கு ஒரு புது  சொந்தத்தை  கண்டு பிடித்து விட்டேன் .

இன்றும் என்னுடன்  பேசுவார்கள் .இலக்கிய  காதலை போல்
அந்த காதலர்கள்  வாழ்கை  சிறப்பாக  போய்க் கொண்டு இருக்கிறது .

   மீண்டும் ஒரு வாழ்கை பயணத்துடன்
  சந்திப்போம்

    ஸ்டீபன் .சா













 




 









 
 
 
 
 


வெள்ளி, 18 ஜனவரி, 2013


பனித்துளியாய்
  உன் கோபம்
வெள்ளி போர்வை போல்
 என் மன புல்வெளியில்
தழுவி செல்லும்  
  நேசமாய்
 உன் புன்னகை
  பனித்துளியை
கரைத்திட கூடாதா...

வெள்ளி, 4 ஜனவரி, 2013

உன் விழியில் விழுந்தேன்

என்னிடம் நீ பேசிய
வார்த்தைகளை விட
நீ மௌனமாய் விழியில்
பேசிய வார்த்தைகளோ
அதிகம்
உன் விழியும் கவிதையாய்
தோன்றும்
சில நேரங்களில்...