வெள்ளி, 19 அக்டோபர், 2012

எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய்

உன் ஞாபகமாய் நான் வரைந்த
    ஓவியங்கள் என்னுள்
இவை ஒவ்வொன்றும்
   பிகாசாவை மிஞ்சியவை
உன் ஒவ்வொரு அசைவுகளுக்கும்
  இன்று வரை எனக்கு அர்த்தம்
விளங்கவில்லை...
  ஏன் பெண்ணே ?
எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய்

இந்த பெண்ணின் நினைவுகளை..

உன் மனதின் ஆழத்தை கண்டுகொள்ள
   என் கூகிள் மனதும் திணறும்
செல்லமாய் பேசிய பேச்சுகளும்
   தண்டனையாய் நான் வாங்கிய
அன்பு கலந்த அடிகள்
  அதற்கு இலவசமாய் கிடைத்த
மெல்லிய மோனோலிசாவை மிஞ்சிய புன்னகை
  சாப்பிட்டு கொண்டே சாய்ந்து
மெலிதாய் என்னை பார்க்கும்போது
   தேவதைகளும் இவளின் அழகை கடன்
வாங்க வேண்டும்
   இந்த பெண்ணின் மனதை கவர
கொங்கு தமிழில் பேசி ,
   கேட்பரிஸ் டைரி மில்க் உடன்
என் இனிய தருணங்களை செலவிட்ட
  நாட்கள் மீண்டும் வருமா?
சந்தேகம் (காதல்) என்ற ஒரு வார்த்தையில்
  என் நட்பும் போனது
நானும் துரமாகிப் போனேன்
  யாருக்கு தான் ஆசை வராது ?
என் இனியவளை கவர்ந்து செல்ல
  காலம் என்னும் அலை அடித்து செல்லாமல்
பத்திரமாய் பாதுகாத்து வருகிறேன்
  இந்த பெண்ணின் நினைவுகளை..

 

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

உன் கண்களால் மன்னிப்பாயா

உன் இதயத்தில் இடம்பிடிக்க
   இலையை வைத்து கரை செல்ல துடிக்கும்
எறும்பை போல் போராடினேன்
   இலையை கூட எனக்கு தர விருப்பம் இல்லை
வாழ்ந்தால் உன்னோடும் இல்லை என்றால்
   நினைவுகளால் வாழ ஆசை
என் காதலை கருணை கொலைசெய்து விட நினைக்கிறன்
   முடியவில்லை!!!
தினமும் போராட்டம் எனக்குள்
   உன்னை கரம் பிடிக்க நினைத்த நாட்களோ
என் மன முடிச்சுகளை அவிழ்க்க நினைக்கிறது
  ஏனோ உன் அடிமையாகி போனது
என் மனது!
  உன்னை என் மனதில் எழுதி வைத்தாலும்
என்னால் ஏற்பட்ட மன காயத்திற்கு
   உன் கண்களால் மன்னிப்பாயா

 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஏழையின் மனது

உன்னை பெற்றவளை விட
  உன்னை வளர்த்த அப்பாவை விட
உன் சகோதரனின் பாசத்தை விட
   ஒவ்வொரு நாளும்
என் உள்ளத்தில் சுமக்கிறேன்
   உன்னை...சுகமாய்
என்னை ஏற்றுக் கொள்வாயா!
   உன் சுவாசம் போல்
உன்னை பின் தொடர்வேன்
 
   இப்படிக்கு
உன்னை கரம்பிடிக்க துடிக்கும்
   ஏழையின் மனது
 

துளிகள்

 
அறிவிக்கப்படாத மின் வெட்டைப்போல்
    இருண்டு போனது உன் நேசம்
 
அவள் நடந்து செல்லும் பாதையெங்கும்
   பின் தொடர்வேன் தெருவிளக்காய்
 
வெங்காயத்தை போல்,
   என் எண்ணங்களை உரித்துப் பார்க்கிறேன்
அங்கும் கண்களில் கண்ணீர்தான்
 
 
 கடற்கறை மணலை
   கவர்ந்து செல்லும்
கடல் அலையைப் போல்
   என் மனதை கவர்ந்து சென்று
இன்று ஏன் அமைதியாய் இருக்கிறாய்
 
உன் எதார்த்தமான சிரிப்பில்
  தோற்று போகிறேன்
தினமும்...
 
ரயில்வே தண்டவாளம் போல்
  அருகில் இருந்தும்
ஒன்று சேர முடியவில்லை
 
என்னை சாய்த்து விட்ட கவிதை நீ
  பெண்ணே
நீ ஏன் எனக்கு மட்டும் கவிதையாகிப் போனாய்

 

இன்றாவது நீ என்னை நினைப்பாயா!

காதல்
என் இதயத்தில் தோன்றி
   அவளின் எண்ணங்களில் முடிந்தது
எதிரியாய்!
   காலைப்பொழுது சூரியனாய்
இரவின் தென்றலாய்
   மழைப்பொழிவின் போது மண் வாசமாய்
என்றும் அவளின் நினைவுகள்
  கவிதையாய் கண்கள்
இவை பேசும் மொழிகள் ஆயிரம்
  இதன் அர்த்தங்களோ யாருக்கு புரியும்
இன்றும் புரிந்தது போல் நினைக்கிறேன்
   என் உயிர் வரை தீண்டிப் போகிறது
தேவதையின் பார்வை
  வாழ்வின் ஒரு பாதியாய்
வசந்தமாய் வீசினாள்
  என் இலையுதிர் கால வாழ்வில்
நானே பேசிக்கொள்கிறேன்
  நடுரோட்டில்
இன்றாவது நீ என்னை நினைப்பாயா!