வெள்ளி, 28 செப்டம்பர், 2012

Give me a chance

 
I know you are my life
   my heart follows you
why you ignore me
   life goes on
days goes on
   you are always mine
you are my song
  you are my life
don't be separate
  when i will meet you
when i willl propose you
  you are my life
I lost in you
l lost my mind
l lost my faith
i lost everything
i can tell you
i will make you happy
   all the time
will you give me chance


 

உன்னை பின்தொடரும் நிழலாய்

என்னுள் நான் தேடிப்பார்க்கிறேன்
    நீ என் தோழியா ? காதலியா?
பண்பிலும் பாசத்திலும்
   என் காதலியாகிப் போனாய்
நேசத்தில் என் தோழியாகிப் போனாய்
   இதை உன்னிடம் எப்படி சொல்லுவது
ஏனோ என்னால் பிரித்து பார்க்கமுடியவில்லை
  உன்னுடன் நடந்த நாட்கள் இன்றும் நினைவில்
நீயில்லா நாட்கள் என்றும் நினைவில்
   நாட்கள் கறைந்து போனாலும்
உன் நினைவுகள் என்றும் வைரம் போல்
   என்னுள் மறைந்து இருக்கிறது
சொல்லாமல் தெரிந்ததால்தான் இன்று
   என்னை வெறுக்கிறாய்...
உன்னை பின்தொடரும் நிழலாய்
   என் நினைவுகள் என்றும் 

திங்கள், 24 செப்டம்பர், 2012

தேவதையின் அருகில் சில நாட்கள் (என் நிலவு)

தொட்டு விடும் தூரத்தில் என் நிலவு

   ஏனோ என்னிடம் வெளிச்சம் வீச மறுக்கிறது

அன்னிச்சையாக என் கண்களோ அவளைத் தேடிக்கொண்டிருக்கும்

  அருகில் ரசிகனாக இருந்தது எவ்வளவு சுகம்

தேவதையின் அசைவுகளில் மனம் பறிபோனது

  தூரத்தில் இருந்தும் ,என் நினைவுகளோ மிக அருகில்

தேவதையின் ஒவ்வொரு நிழல் படத்திலும்

  நான் தூரத்தில் இருந்தேன்

என் இந்த இடைவெளி என்று புரியவில்லை

    எண்ணகளின் மூலம் வெளியிட்டேன்

 ஏமாற்றமே மிஞ்சியது ...

அவள் தூரிகையில் சாய்ந்து ஆடும்போது

  தேவதைகள் சாமரம் வீசின

இவளின் வீழி அம்புகளில் உறைந்து போனது

  மலைகளின் இளவரசி இந்த கொடைக்கானல்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

என் குட்டி தேவதை!!!

பனிபடர்ந்த அந்த சோலைவனத்தில்
  வெற்றி பெற்ற வீரனாய் பறந்தது எங்கள் வாகனம்
நின்றது ,சில்வர் அருவியின் அழகைக்காண
 புகை மூட்டம்,நிரம்பிய சாலையில்
நிழலுக்கு ஒதுங்கிய வாகனமாய் , காத்திருந்தேன்
  குளிர்ந்த காற்று மேனி எங்கும் தீண்டிட வழிபார்த்து இருந்தேன்
மேனி படர்ந்த கம்பளி சால்வையுடன் ,
  தேவதை நடந்து வந்த அழகைச் சொல்லிட
வார்த்தைகள் என் தமிழில் இல்லை
  சில்வர் அருவியும் உறைந்து போனது
ஏன் ? என்னைப்போல் மனதை பறிகொடுத்தது
  பேசும் போது வெளிப்படும் சிறு பனிப்புகை
காற்றில் கலந்து என் கன்னத்தை உரசிச் சென்றது
   இப்படி ஒரு காலைப்பொழுது
மீண்டும் வருமா ...
   அவள் என் குட்டி தேவதை

தேவதையின் அருகில் சில நாட்கள் (உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா)

என் முதல் ரயில் பயணம் தேவதையுடன்தான்
   தாமரை இலையில் நீர் போல்
தூரத்தில் இருந்த என் மனது , துள்ளியது
   தேள் கடித்தவன் துள்ளுவது போல்
எங்கு சென்றாலும் அவளின் நினைவுகள் ஆட்கொண்டன
   அவள் எண்ணங்களின் சிறையில் என்னை ஆயுள் கைதியாகிவிட்டேன்
நான் மட்டும் தனித்தீவில் இருப்பதாய் உணர்ந்தேன்
   நண்பர்களுடன் பேசும்போது அருகில் என் தேவதை
வாசனை தீண்டியவுடன் முக்தி பெற்றேன்
    என்னவொரு அழகான தருணம்
என்னவள் பாதுகாப்பாக உறங்குகிறாள
    என்று பார்வையிட்ட நொடிப்பொழுது
பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றது
   என் எண்ணங்களும் , என் நேசமும்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தேவதையின் அருகில் சில நாட்கள் (கொடைக்கானல்)

கோடைப் பூக்கள் அவளைப் பார்க்க ஏங்கியது
    பனித்துளியைப் போல் வெள்ளை உள்ளம் கொண்டவள்
இந்த பூவின் வாசம்,குறிஞ்சிப்பூவின் வாசத்தை வீழ்த்தியது
    இவள் செல்லும் பாதையெல்லாம் பனிமூட்டம்
மேகக்கூட்டங்களும் தலைவணங்கி சேவகம் செய்தது
    பூக்களும் இவளைப் பார்த்தவுடன் தலை சாய்ந்து கொள்கிறது
காற்றில் தவழ்ந்து வரும் இசையைப் போல்
   அவளின் பேச்சு என் இதயத்தை வருடியது
தேவதையின் கனவில் கறைந்து
   தினமும் வாழ ஆசைப்படுகிறேன்
நெற்றிப் பொட்டு ஒன்றே போதும்
   அவளின் அழகைச் சொல்லிவிட
கனவுகள் தருகிறாள்,ஏக்கங்கள் தருகிறாள்
   இந்த கொங்கு நாட்டு தேவதையிடம் இழந்தேன்
என்னை முழுவதும்
   இந்த பூவின் வாசத்தில் மயங்கியது கொடைக்கானல் மட்டும் அல்ல
நானும் தான் ...
   உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா!!! 

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

இலைச் சருகாய் ...

காலைப் பனித்துளிபோல்
   என் மனதில்  ஒட்டிக் கொண்டாள்
மறுக்காமல், மறக்காமல்  நான் தவிக்கிறேன்
   புரியாத புன்னகையில்  சாய்த்து விடுகிறாள்
என்னை கடந்து போகும் நிமிடங்களில் ...
   பெண்ணே உன்னை கரம் பற்ற
கஜினி  போல் ,உன் மனதில்  படையெடுத்து வருகிறேன்
   நீயோ ! முகம் பார்த்து பூச்செண்டு  வீச மறுக்கிறாய்
நாட்கள் ஓடினாலும் ,உன் நினைவுகள் ஓடவில்லை
   என் காதலோ  காய்ந்த இலைச் சருகாய்  போனது
உன் மனதை பார்த்து வந்த காதல்
  நீ வரும் வழி பார்த்து காத்து  இருக்கிறது  

உன் பார்வையில்

   பெண்ணின் மனமோ  ஒரு பூங்காற்று
    காற்றின் இசையில் அசையும் இலைபோல்
அதன் அசைவுகளில்  என்னை பறிகொடுத்தேன்
  அவள் மடியில் தலை சாய்த்து
தேவதையின் வருடலில் மகிழ  ஆசைப்பட்டேன்
   யாரும் பாத்திராமல் , பாசத்துடன்  பார்க்கும்
பார்வையின்  அர்த்தம் தான்  புரியவில்லை
    மனதின்  எல்லைகோடுகளை தீண்டி போகிறது
 இந்த குட்டி தேவதையின் பார்வை!!!
    இந்த பெண்ணின் பார்வை  அம்புகளில் விழ்ந்து போனேன்
  மீண்டும், ஏன் கொள்கிறாய்  உன் பார்வையில்...

திங்கள், 3 செப்டம்பர், 2012

வறுமையில்

காதல் நேற்று கண்ட கனவாய் உள்ளது
   என் இதயத்தில் ஆரம்பித்த காதல்
கானல் நீரைப் போல் ஆனது
   எல்லாம் இருந்தும் இவள் அன்பில்லாமல்
வறுமையில் வாடுகிறேன்!!!
   வறுமையில் இதுவும் ஒருவகை
காதலியின் அன்பில்லாமல் வாடுவது !!!
   என்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை அறியாமல்
தினமும் ஒரு வண்ணத்துடன் வரும் பட்டாம் பூச்சிபோல்
   சிறகடித்துக் கொண்டு இருக்கிறது அந்த நிலவு
என்றாவது என் வானில் வட்டமிடுமா?

காலைப்பொழுது

சூரியனின் ஒளிக்கீற்றுகள்
  என் வீட்டின் ஜன்னலில் வாசம் செய்ய
கண்களை தேய்த்து கொண்டே எழுந்தேன்
  என்னை வரவேற்ற சூரியனை பார்க்க
சோம்பலும் ,காலை கனவுகளும் முறிந்துபோக
     என் உடம்பை முறுக்கி எழுந்தேன்  
 என் வீட்டு மாடியில்,காலையில்
    பல் துலக்கி கொண்டே வானத்தை பார்ப்பது
  எவ்வளவு சுகம் ...
    இன்றாவது என்னை அழகாக மாற்றாதா !!!
 நான் வாங்கிய பேசியல் க்ரீம்
     என் மனதில் பேசியபடி , தலைவாரிக்கொண்டு
 ரயில்வே பாதையில் அதை முந்திக்கொண்டு
     நடந்தேன்,கண்களில் புதிய நம்பிக்கையுடன்
 பேருந்தில் உள்ள கூட்டத்தில்,
     பக்கத்து மனிதனின் வேர்வை நாற்றம், கால்மிதிபடுதல்
 பேருந்து ஓட்டுநரின் விளையாட்டுதனமான குலுங்கல்
     ஆகமொத்தம் விடுதலையான சிறைப்பறவையாய் ,
   இறங்கினேன் என் அலுவலக வாசலில்.