வெள்ளி, 18 மார்ச், 2016

Waiting for My child!!!!

இன்னும் சில தினங்களில்  நானும் என்  குழந்தையை
கையில் ஏந்திக் கொண்டு  இருக்கும் அந்த ஒரு நொடிக்காக
காத்து கொண்டு இருக்கிறேன் .

 இப்ப எல்லாம்  ஒரு பேபி  விளம்பரம்  வந்த என்னை அறியாமல்
ஆசையோடு பார்கிறேன் .
 அமேசான்  வெப்சைட்  பேபி ப்ரோடுக்ட்ஸ் வாங்கணும் தோணுது
டெய்லி எதாவது ஒரு நியூஸ் பேபி  பத்தி பாத்துகிட்டு இருக்கேன்
எனக்கு பயன் பொறந்த IIT படிக்க வைக்கணும்,பொண்ணு பொறந்தா
கூடவே இருக்கனும் .இப்படி அசைகள் அதிகமாக இருக்கு

இப்ப யோசிச்சு  பாக்க முடியுது  என் பிள்ளை என்றால் எனக்கு வரும் இந்த  திட்ட மிடல்,பாசம்,நேசம்  எல்லாமே  என் அப்பா நான் பிறக்கும் பொது என் அப்பா எப்படி எல்லாம் திட்டம் இட்டு இருபாங்க  தோணுது !!!

என்னை தன்னோட கைல ஏந்திய என் அப்பா என் கொழந்தைய  தூக்கணும் பிறக்கும் போது  !!!




சனி, 26 செப்டம்பர், 2015

நலன்

நலனின் வாழ்கையில் இன்று  மிகவும் முக்கியமான நாள்
 என்ன  ஒரு ஆச்சரியம் அவன் தேடிய ,மிகவும் ஆசை  பட்ட 
மொபைல் மோடோரோலா  x  play  ப்ளிப்கர்ட் ஆன் லைன் ஷாப்  பில் 
வாங்கினான் . விலை அதிகமாக இருந்தாலும் ,இன்றுவரை அவனுக்கு பிடித்தது அந்த மொபைல் தான் .
  தம்பி சூப்பர் டா !!. என்றான் 
பிரண்ட்ஸ் ட்ரீட்  என்றார்கள்.அன்றைய தினம் உலகமே அவன் உள்ளங்கையில் இருபது போல எண்ணினான்.

 உள்ளங்கையில் அதனை வாங்கி  கொண்டு 
செல்லமாக அவன் நாய்க்குட்டியை வருடி கொடுப்பது போல பண்ணினான் 
கால்கள்  தரையில் இல்லை!!
 வழக்கம்போல செல்பி  ஆக  அவன் இருக்கும் தெருவில்,மாடியில் 
போட்டோ எடுத்து கொண்டு இருந்தான்.

அவன் வீட்டு மாடியில்  சின்டக்ஸ் தொட்டி இருக்கும் அதன் அருகே இருக்கும்அமர்ந்து கொண்டு வானத்தை  ரசித்து கொண்டு இருப்பான்.
பெரும்பாலும் இரவு நேரங்களில்!!!
 இரவு நேர  விண்மின்கள் ,தமிழ் எழுத்து  ஆக்  மூன்று புள்ளிகள் இருக்கும் 
தினமும் அதை பார்த்து கொண்டு.கொஞ்சம் மனதின் பாரங்களை இறக்கி  
விட்டு !!!
 காத்து வாங்குவது எவ்வளவு சுகம்.

இன்றும் சில கிராமங்களில் பெண் பிள்ளை பிறந்தால் கைல , கீழ் உதட்டிற்கு பக்கத்தில் மூன்று  புள்ளிகளுடன் பச்சை குத்துவாங்க !!
வீட்டுல பெரியவுங்க சொல்லுவாங்க காத்து கருப்பு அண்டதுன்னு 

அதுவும் எடுப்பா  இருக்கும் !!! அதுவும் தமிழ் பெண்களுக்கு 
அப்படி ஒரு பெண் நலன் வாழ்கை   வந்தாங்க 
அவள்  பெரு  விரல் பக்கத்துல அழகா புள்ளி வச்சு கோலம் போட்ட 
மாதிரி இருந்தது !!! 
வானத்துல  தெரிந்த அதே  புள்ளிகள்  !!!!
-------நலன் ---அவள் --அவர்கள் காதல் -->அவன் எண்ணங்கள்  இணைய 
வேண்டும் என்று அவன் உள்மனது சொல்லுகிறது ...

 மீண்டும் ...................... 


  

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் மிக அழகாக செல்கின்றன

வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும்  மிக அழகாக செல்கின்றன

நேற்று நடந்த நிகழ்வாக என் திருமணம்
 அமைதியாக  நான்
என் துணைவியோ அப்படி இல்லை
 அவள் அமைதியாக இருந்து  நான் பார்த்தது இல்லை
மனதில் உள்ளதை வெளிப்படியாக சொல்லி விடுவாள்
 நான் அப்படி அல்ல
இருவருக்கும் நிறைய முரண் பாடுகள்

எதிரும் புதிருமாக  நாங்கள்
 புதிய வாழ்கை எப்படி போகும் என்ற எதிர் பார்ப்புடன்
என்னை தேடி வந்தவள்
 அவளின் ஆசைகள்  கனவுகள் ஆயிரம்
அதை  நிறைவேற்றும் கனவுகள் மட்டுமே
 என்னிடம் இருந்தது
ட்விட்டர் போல் தினமும் என்னிடம்
 வரும்
விருப்பங்கள் நிறைவேறா   கனவுகள்
என்னிடம்  கண்களை விரித்து
கவிதையை  போல பேசுவாள்

எங்களின்  உரையாடல்களில்
 எங்கும்  என் மனைவியின்  வாசனை தான்

இன்றும் நினைக்கிறேன்  அவளின் ஆசைகளை

என்றாவது ஒருநாள்  நிறைவேற .....



ஞாயிறு, 4 மே, 2014

ஏன்?...

நல்ல படிப்பு,திறமைகேற்ற ஒதியம் இல்லை,இருந்தாலும்
வீட்டின் வறுமை நிலையை நினைத்து,வேலையை தேடி ஓட வேண்டி உள்ளது.தனகென்று எதுவும் சேர்த்து கொள்ளாமல்,குடும்பத்திற்கு என்று
வாங்கிய சம்பளம் எல்லாம் கொடுத்து விட்டு,இருக்கும் பணத்தில் சிக்கனமாக
வாழ்க்கை நடத்தும் இளம் ஆண்கள் இங்கு ஏராளம்.அந்த ஆண்கள் சாதியில்
நானும் ஒருத்தன்.
  கல்யாணம் என்று வரும் போது ,அதுவும்  பெற்றோர் பார்த்து மனம் முடிக்க ஆசை படும் பெண்  வாழ்கையில் வரும் போது
நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?.வங்கியில் எவ்வளவு வைத்திருக்கிறாய் ?
மாத சம்பளம் எவ்வளவு ? இவை எல்லாம் இன்டர்வியூ கேள்விகள் .
இதில் பாஸ் பண்ணினாத்தான் .அடுத்த படி பேச்சு வார்த்தைகளை இரு
வீட்டாரும் தொடங்குகிறார்கள்.
வாழ்கையில் பணம் மட்டும் தான் தேவையா?
நல்ல பையன் ,தன்னுடைய பெண்ணை நன்றாக வைத்து இருப்பான!!!!
என்று நூற்றில் ஒரு பெற்றோர் தான் நினைகிறார்கள் ?
இதில் மாற்று கருத்து இருந்தால் என்னிடம் நீங்கள் பேசலாம்
எல்லா பெண்களும் கல்யணம் என்று வரும் போது
நல்ல சவிங்க்ஸ் வைத்து இருந்தால் போதும்
என்று நினைப்பது ஏன்?...


உன் நிழலாக வருவேன்

சில நேரங்களில் நமது சிந்தனைகள் கூட அழகாய் போகும்
    நம் எண்ணங்கள் அழகானவற்றை தேடும் பொது
உன்னோடு வாழ்ந்திட ஆசையடி
  என் தனிமை என்னை கொள்ளுகிறது
செல்லமாய் என் கன்னத்தை கிள்ளும் போதும்
 ஓரவிழி பார்வையில் என்னை களவாடும்
உன் கண்களும் .
   என்னை விட்டு செல்ல மறுக்கிறது
பூக்களில் தேனை தேடும்
  வண்டை  போல
உன் கண்களில் தேடினேன்
   நேசத்தை
வலிகள் தந்தாலும்
   சுகமாய் போகும்
உன்னோடு வாழும்போது

 படியில் பயனும் செய்யும்
 பயணியை போல
மனதில் ஓரத்தில் நின்று கொண்டு வருகிறேன்
 கைபிடித்து நீ அழைத்தால்
உன் நிழலாக வருவேன் ...
 உன்னோடு


மாதத்தில் முதல் வாரம்

மாலை பொழுதில்
 இருக்கும் வெப்பம் போதாது
 என்று,
என் அறையின் மின் விசிறி கூட
 வெப்ப கற்றை வீசுகிறது
மாதத்தில் முதல் வாரம்
 வறுமை இல்லாமல்
நானும் ஒரும் அம்பானி தான்
 என்று என்னும் மனது
ஒரு பக்கம்
 இன்றாவது நாம் நினைத்த ஒன்றை
வாங்கலாமா?..
 நினைத்த ஹேர் கட் பண்ணலாமா ?
ஜாலி அஹ ஒரு ட்ரிப்  போகலாமா ?
இல்ல பாரில் நண்பர்களுடன்
    இருக்கும் போது
மச்சான் ஒரு பீர் சொல்லு ?
என்று செல்லமா கேக்கலாமா ?
இரவில் நெடுஞ்சாலையில்
 யாரும் இல்லாமல் தனிமையில்
ஒரு வாக் போலாமா ?
 இந்த தடவை யாவது iphone  வாங்கலாமா ?
இப்படி நம் ஆசைகள் விண்ணை தொடும்
  யாரோ என் அறையை தட்டும்
சத்தம் கேக்கிறது
திறந்து பார்த்தல் தம்பி ?
இந்த மாத வாடகை பணம் இன்னும்
வரவில்லை எப்போ கிடைக்கும் ?...
இப்படித்தான் எல்லாருடைய வாழ்கையும்
போகிறது மாதத்தில் முதல் வாரம்




















செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கண்ணாடி

உடைந்த கண்ணாடி  துகள்களிலும் 
 உன் முகம் பார்க்கலாம் 
நீ  முயற்சி செய்தால் 
  உன்னை  நீ  விரும்பும்  வரை  மட்டுமே  
உன்  நிழலும்  கூடவே வரும் 
  உன்   எண்ணங்கள் அழகாக இருக்கின்றன 
ஏன்றாவது நினைந்தது உண்டா ?
அன்று வேலை  தர மறுத்த Facebook  
     இன்று இவரின் ( Brian) -whatsapp ஐய்  கோடிக்கணக்கில் 
விலைக்கு வாங்கியது 
    என்னால் உலகை மாற்ற மூடியும்  என்று 
அவர் தன்னையே நம்பியதால் தான் 
    கண்களில்  தன்னம்பிக்கை ஒளிர 
ஒவ்வொரு நொடியும்  நமது 
    நம்பிக்கையுடன் தொடங்கினால் 
நாமும் உலகை வெல்லலாம் 
   நம் மனம் கூட  
முகம் பார்க்கும் கண்ணடியை போல தான் 
  நாம் பார்க்கும் பார்வையில் தான்  உள்ளது 
நமது வாழ்கை..