ஞாயிறு, 4 மே, 2014

ஏன்?...

நல்ல படிப்பு,திறமைகேற்ற ஒதியம் இல்லை,இருந்தாலும்
வீட்டின் வறுமை நிலையை நினைத்து,வேலையை தேடி ஓட வேண்டி உள்ளது.தனகென்று எதுவும் சேர்த்து கொள்ளாமல்,குடும்பத்திற்கு என்று
வாங்கிய சம்பளம் எல்லாம் கொடுத்து விட்டு,இருக்கும் பணத்தில் சிக்கனமாக
வாழ்க்கை நடத்தும் இளம் ஆண்கள் இங்கு ஏராளம்.அந்த ஆண்கள் சாதியில்
நானும் ஒருத்தன்.
  கல்யாணம் என்று வரும் போது ,அதுவும்  பெற்றோர் பார்த்து மனம் முடிக்க ஆசை படும் பெண்  வாழ்கையில் வரும் போது
நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?.வங்கியில் எவ்வளவு வைத்திருக்கிறாய் ?
மாத சம்பளம் எவ்வளவு ? இவை எல்லாம் இன்டர்வியூ கேள்விகள் .
இதில் பாஸ் பண்ணினாத்தான் .அடுத்த படி பேச்சு வார்த்தைகளை இரு
வீட்டாரும் தொடங்குகிறார்கள்.
வாழ்கையில் பணம் மட்டும் தான் தேவையா?
நல்ல பையன் ,தன்னுடைய பெண்ணை நன்றாக வைத்து இருப்பான!!!!
என்று நூற்றில் ஒரு பெற்றோர் தான் நினைகிறார்கள் ?
இதில் மாற்று கருத்து இருந்தால் என்னிடம் நீங்கள் பேசலாம்
எல்லா பெண்களும் கல்யணம் என்று வரும் போது
நல்ல சவிங்க்ஸ் வைத்து இருந்தால் போதும்
என்று நினைப்பது ஏன்?...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக