மழைச்சாரலின் போது வரும் மண் வாசனை போல்
அவள் என்னருகில் இருந்தாள்
தீடிர் மழையால் மகிழ்ந்து போனது
சென்னை மட்டும் அல்ல , நானும் தான்
அருகில் இருந்தும் ,மழையில் நனைந்த
தீப்பெட்டி போல் பற்ற முடியாமல்
தவிக்கிறது என் தீக்குச்சி மனது
நண்பனிடம் பிரியா விடை பெற்று
நனைந்த மனதுடன் , நடைபாதையின்
கருப்பு வெள்ளை கோடுகளுக்கு இடையே
அவள் மனதின் வெள்ளைக் கோட்டை
என் கால் பாதங்களில் தீண்டிக் கொண்டே நடந்தேன்
அவள் என்னருகில் இருந்தாள்
தீடிர் மழையால் மகிழ்ந்து போனது
சென்னை மட்டும் அல்ல , நானும் தான்
அருகில் இருந்தும் ,மழையில் நனைந்த
தீப்பெட்டி போல் பற்ற முடியாமல்
தவிக்கிறது என் தீக்குச்சி மனது
நண்பனிடம் பிரியா விடை பெற்று
நனைந்த மனதுடன் , நடைபாதையின்
கருப்பு வெள்ளை கோடுகளுக்கு இடையே
அவள் மனதின் வெள்ளைக் கோட்டை
என் கால் பாதங்களில் தீண்டிக் கொண்டே நடந்தேன்
வழியெல்லாம் பெருவெள்ளம்
கூட்டுக்கு விரைவாக பறந்து செல்லும் பறவையாய்
சாலையில் மஞ்சள் ஒளியில் மின்னும் வாகனங்கள்
என் மேல் விழுந்த சிறுதுளியை ரசித்து கொண்டே நடந்தேன்
நான் நடந்த பாதையில் அவளும் நடந்தாள்
கருப்பு கோடுகளை தாண்டாமல்
என் மனதின் நிறமோ கருப்பு
தினமும் ஒரு மழைக்காலம்
அவள் என்னுடன் வந்தால்
பேருந்தில் நான் பயணம் செய்யும் போது
அவளின் ஞாபகம் மழை நீரைப்போல்
பேருந்தின் கண்ணாடியில் வழிந்து செல்கிறது
என்னை அறியாமல் துடைத்துக் கொண்டேன்
என் விழியில் வழிந்த நீரை !!!
மீண்டும் அவளின் அன்பின் மழையில்
நனைய ஆசை!!!
வருமா என் காதல் மேகம் ...
அவளுடன் வாழ்ந்தால் தினமும்
மனசெல்லாம் மழை தான்
அவளுடன் வாழ்ந்தால் தினமும்
பதிலளிநீக்குமனசெல்லாம் மழை தான்
kavithai... kavithai... super-da..
பதிலளிநீக்கு"என்னை அறியாமல் துடைத்துக் கொண்டேன்
என் விழியில் வழிந்த நீரை"
நல்ல இருக்கு , தலைப்பு மட்டும் கொஞ்சம் சினிமாவை தாண்டி யோசித்துப்பார்
பதிலளிநீக்கு