ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

தேவதையின் அருகில் சில நாட்கள் (உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா)

என் முதல் ரயில் பயணம் தேவதையுடன்தான்
   தாமரை இலையில் நீர் போல்
தூரத்தில் இருந்த என் மனது , துள்ளியது
   தேள் கடித்தவன் துள்ளுவது போல்
எங்கு சென்றாலும் அவளின் நினைவுகள் ஆட்கொண்டன
   அவள் எண்ணங்களின் சிறையில் என்னை ஆயுள் கைதியாகிவிட்டேன்
நான் மட்டும் தனித்தீவில் இருப்பதாய் உணர்ந்தேன்
   நண்பர்களுடன் பேசும்போது அருகில் என் தேவதை
வாசனை தீண்டியவுடன் முக்தி பெற்றேன்
    என்னவொரு அழகான தருணம்
என்னவள் பாதுகாப்பாக உறங்குகிறாள
    என்று பார்வையிட்ட நொடிப்பொழுது
பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றது
   என் எண்ணங்களும் , என் நேசமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக